
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
'தடா' என்ற சொல் இப்போதெல்லாம் தீவிரவாதத்தை அடக்க ஏற்பட்ட சட்டத்தைக் குறிக்கிறது.
எட்டாம் நூற்றாண்டில் ஒரு தடா இருந்தது. இப்போதும் தென் மாநிலங்களில் பயன்படும் சொல் இது. தவலை என்ற பொருளில் பெரிய, வாயகன்ற பாத்திரத்தைக் குறிக்கும். இதில் நூறு தடா எடுத்துக் கொள்வோம். அதை 'கொலஸ்ட்ரால்' கவலையின்றி வெண்ணெயால் நிரப்புவோம்! அதை வைத்துக்கொண்டு அக்கார அடிசில் பண்ணச் சொல்வோம். அக்கார அடிசில் என்பது முழுக்கப் பாலிலேயே சமைத்து வெல்லம், கற்கண்டு எல்லாம் சேர்த்து முழங்கை வரை நெய் சொட்டச் சொட்ட செய்யும் அமுது.