
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
காலையில் என்னை எழுப்புவது முதல் காகங்கள், ஒற்றைக் குயில், சிங்கப்பூரிலிருந்து வந்து தாழ்வாகப் பறந்து மீனம்பாக்கத்தில் தரையிறங்கும் விமான சத்தம், ஸ்டேட் பாங்க் காலனியில் கறிகாய் விற்பரின் சத்தம். பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைக்க அவசரப்படுத்தும் வேனின் ஹாரன் ஒலி. தரையடித் தண்ணீரை உறிஞ்ச மோட்டார் போட்ட சத்தம். இதெல்லாம் 2007-ன் அதிகாலை சத்தங்கள்.
தொண்டரடிப் பொடி ஆழ்வார் காலத்தில் திருவரங்கத்தில் அதிகாலை சத்தங்கள் வேறு, காலை வேளையில் ஆழ்வாருக்கு முதல் வேலை உறங்கிக் கொண்டிருக்கும் அரங்கனை எழுப்புவது.