
கல்கி வார இதழில் 2006 – 2007 காலகட்டத்தில் எழுத்தாளர் சுஜாதா அவர்கள் ‘வாரம் ஒரு பாசுரம்’ கட்டுரைகளை தொடர்ந்து 52 வாரங்கள் எழுதினார். அத்தொடரிலிருந்து சில பகுதிகள் இங்கே இத்தொடரில்...
அனைத்துப் பகுதிகளையும் மேலும் சுவாரஸ்யமான பல கதை, கட்டுரைகளையும் கல்கி களஞ்சியத்தில் சந்தா செலுத்திப் படிக்கலாம்.
சந்தா செலுத்த...
தமிழில் பல சொற்கள் காலப்போக்கில் பொருள் மாறுகின்றன. ஐயர் என்ற சொல், சங்க காலத்தில் 'தலைவர்' என்ற பொருளில்தான் பயின்று வந்தது. இன்று அது கேலி வார்த்தையாகிவிட்டது.
'அந்தணன்' என்ற சொல்லும் அப்படி காலப்போக்கில் பொருள் மாறி வந்துள்ளது. திருக்குறள் 'அறவாழி அந்தணன்' என்று கடவுளைக் குறிக்கிறது. மற்றொரு குறளில் 'அந்தணர் என்போர் அறவோர் மற்றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுகலால்' என்று எல்லா உயிர்களின் மேலும் அன்பு செலுத்துபவர்களை அந்தணர் என்றது.
இந்த உயர்ந்த பொருளில்தான் திருமங்கையாழ்வார் தன் திருநெடுந்தாண்டகத்தில் இந்தப் பாடலில் அந்தணனைப் பயன்படுத்தியுள்ளார்.