ஆச்சரியமூட்டும் பாஸ்கர பூஜை ஸ்தலங்கள்..!

அமிர்த கடேஸ்வர் கோயில்
அமிர்த கடேஸ்வர் கோயில்
Published on

சூரிய ஒளி நேராக கருவறையில் விழுந்து சூரியன் இறைவனை பூஜிக்கும் ஸ்தலங்கள் நாடெங்கும் ஏராளம் உண்டு.இதனை பாஸ்கர பூஜை ஸ்தலங்கள் என்கிறார்கள்.

டலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் இருந்து 8 கிமீ தொலைவில் உள்ள மேல கடம்பூர் அமிர்த கடேஸ்வர் கோயிலில் மூலவர் அமிர்த கடேஸ்வரர் நவபாஷாணத்தால் ஆனவர். இவர் மீது பங்குனி மாதம் 3,4,5 ஆகிய தேதிகளில் சூரிய ஒளி நேரடியாக விழுவதால் இதை பாஸ்கர பூஜை தலம் என்கிறார்கள். சூரியனைப் போலவே சந்திரனும் தன் ஒளியில் மூலவரை தரிசிக்கும் அதிசயம் ஒவ்வொரு அன்னாபிஷேகத்தின் போதும் அரங்கேறுகிறது. இத்தலத்தில் சனி பகவான் கழுகு மீது அமர்ந்து இருப்பது விஷேசம்.

திருப்பூர் மாவட்டம் உடுமலைப் பேட்டை அருகே கணியூருக்கு அருகே அமைந்துள்ள கடத்தூர் அர்ச்சுனேஸ்வரர் கோயிலில் ஆண்டு முழுவதும் அதிகாலையில் சூரிய ஒளி அருகே உள்ள அமராவதி ஆற்றின் நீரில் பட்டு பிரதிபலித்து சுயம்பு லிங்கமாக இருக்கும் அர்ச்சுனேஸ்வரர் மீது படுவது சிறப்பம்சம். சூரியன் திசை மாறும் காலத்தில் கூட சூரிய ஒளி சிவலிங்கம் மீது விழும் வண்ணம் அமைக்கப்பட்டுள்ளது சோழர் கால கட்டிடக்கலையின் சிறப்பாகும். ஆற்று நீரில் படும் சூரிய ஒளி ஆற்றுக் கரையை கடந்து மூன்று நிலை கோபுரம், நந்தி, அர்த்த மண்டபம், மகாமண்டபம் தாண்டி சிவ லிங்கம் மீது விழுவது அதிசயமான ஒன்று, என்பதால் இத்தல  இறைவனை வழிபட நிழல் கிரகமான ராகு கேதுவின் தோஷங்கள் மற்றும் சர்ப்ப தோஷங்களும் விலகுவதாக ஐதீகம்.

ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்
ஏகாம்பரேஸ்வரர் ஆலயம்

திருச்சிக்கு அருகே உள்ள துறையூரிலிருந்து 22 கிமீ தொலைவில் அமைந்துள்ளது செட்டிகுளம் அங்குள்ள ஏகாம்பரேஸ்வரர் ஆலயம் 800க்கும் மேற்பட்ட ஆண்டுகள் பழமையானது.   இங்கு ஆண்டுதோறும் மாசி 19,20,21  தேதிகளில் சூரிய ஒளி ஏகாம்பரேஸ்வரர், அம்பாள் மீதும், மாலையில் முருகன் மீதும் விழுந்து பாஸ்கர பூஜை நடக்கும் அதிசயம் நிகழ்கிறது. ஒரே நாளில் இப்படி அற்புதம் நடப்பதை பக்தர்கள் ஆர்வமாக பார்க்க வருகிறார்கள்.

ஞ்சையிலிருந்து 20 கிமீ நாகை நெடுஞ்சாலையில் அம்மா பேட்டைக்கு மேற்கே ஒரு கிமீ தொலைவில் மெயின் ரோட்டையொட்டி அமைந்துள்ள கோயில் உடையார் கோயில் எனும் திருக்களாவுடையார் கோயில்.   இங்கு ஒவ்வொரு ஆண்டும் பங்குனி மாதம் 2 ந்தேதியிலிருந்து 6 ம்தேதி வரை 5 நாட்களும் அதிகாலை சூரியனுடைய கதிர்கள் நடந்து வருவதைப் போன்று வந்து சிவலிங்கம் மீது விழுந்து பூஜை செய்து விட்டு பிறகு வந்த வழியே திரும்பப் போவதைப் போல செல்லும் அதிசயம் நடக்கும்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள சங்கரன்கோவிலில் அமைந்துள்ள சங்கர நாராயணன் கோயிலில் மார்ச் மாதம் மற்றும் செப்டம்பரில் மூன்று நாட்கள் மட்டுமே (20, 21,22) சூரியனின் கதிர்கள் நேராக சிவலிங்கம் மீது விழும் அதிசயம் நிகழும் வருடத்தில் இந்த 6 நாட்கள் மட்டும் சூரியனின் ஒளி நேரடியாக லிங்கம் மீது விழும் பாஸ்கர பூஜையை காணலாம். இந்த கோயிலை கட்டியவர் மன்னன் உக்கிர பாண்டியன்.

விருத்தாசலம் அருகே உள்ள ராஜேந்திர பட்டினத்தில் உள்ளது திருக்குமாரசுவாமி கோயில். இங்கே ஒவ்வொரு சிவராத்திரி அன்றும் நான்காம் ஜாம பூஜையின் போது சூரியன் தன் ஒளியால் சிவனை வழிபடும் அதிசயம் நடக்கின்றது.

ஆதிபுரிஸ்வரர் கோயில்
ஆதிபுரிஸ்வரர் கோயில்

காஞ்சிபுரம் மாவட்டம் சோழிங்கநல்லூர் அருகே உள்ள பள்ளிக்கரணையில் உள்ள ஆதிபுரிஸ்வரர் கோயில் பல சிறப்புகள் கொண்டது. அதில் ஒன்று. இங்கு மாசி மாதம் 15 ந்தேதி முதல் 30 ந்தேதி வரை 15 நாட்களுக்கு சூரியனின் ஒளிக்கதிர்கள் மூலவர் சிலை மீது விழும் என்பது தனிச்சிறப்பு.

ரியலூர் மாவட்டம் காரைக்குறிச்சியில் உள்ள பசுபதீஸ்வரர் கோயிலில் ஏப்ரல் மாதம் மற்றும் ஆகஸ்ட் மாதம் 20 ம்தேதி இக்கோயிலின் மூலவராக இருக்கும் லிங்கத்தின் மீது சூரிய ஒளிபட்டு கோயில் கருவறையை பொன்னொளியில் பிரகாசிக்கும்.

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் நகரில் செய்யாறு கரையில் அமைந்துள்ளது ரிஷபேஸ்வரர் கோயில். இந்த கோயிலில் பெரிய நந்தி கோயிலுக்கு வெளியே உள்ளது. இந்த நந்தி மீது பங்குனி மாதம் 3ம் தேதி மாலை 3மணிக்கு மேல் சூரிய ஒளி கோயிலின் நந்தீஸ்வரர் மீது விழுகிறது. அந்த நேரத்தில் நந்தீஸ்வரர் பொன்னிறமாக ஒளிர்கிறார்.

குழந்தைகளுக்கு பெரிதும் நன்மைகள் வழங்கும் மிகப்பழமையான கோயில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில் உள்ள ஸ்ரீ நாமபுரீஸ்வரர் கோயில். இங்கே ஆண்டுக்கு ஒரு முறை மார்கழி 10 முதல் தை 10 வரை காலை 6.30 முதல் 6.45 மணிக்குள் 3 நிமிடங்கள் மட்டுமே மூலவர் சிவனை சூரியன் தனது ஒளிக்கதிர்களால் வழிபடும் அற்புதக்காட்சியை தரிசிக்கலாம்.

இதையும் படியுங்கள்:
காலநிலை மாற்றத்திற்கு எதிராக களம் இறங்கும் குடும்ப பராமரிப்பு அமைப்பு!
அமிர்த கடேஸ்வர் கோயில்

குருத்தோலை வேலாயுத சுவாமி கோயிலில் உள்ள முருகன் சிலை மீது ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 22 ம் தேதி சூரிய பூஜை நடக்கும். அப்போது சுவாமியின் பாதத்தில் தொடங்கி மார்பு வரை சூரிய ஒளி படர்ந்து செல்லும் அதிசயத்தை காணலாம்.

ருடத்தில் 365 நாட்களும் நரசிம்மர் மீது சூரிய ஒளிபடும், சூரிய அர்ச்சனை நடைபெறும் ஒரே கோயில் விழுப்புரம் அருகே உள்ள அரகண்டநல்லூர் அருகே உள்ள அத்திரி லட்சுமி நரசிம்மர் கோயில்தான்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com