திருவாடனை. அங்கு ஒரு சிவன் கோயில் உள்ளது. ஆண்டுக்கு ஒரு முறை விழா வரும். இதில் முதல் நாளும் கடைசி நாளும் ஊர் பெரிய மனுஷனுக்கு தலப்பா போட்டு, தாம்பூலத்துடன் முதல் மரியாதை செய்வார்கள். முதல் மரியாதை பெறுவதில் இரண்டு சமூகத்தினர் இடையே கடும் போட்டி. வருடா வருடம் விழா வந்தால் ஊர் ரெண்டு பட்டு போய் விடும். யாரும் யாருக்கும் விட்டு தருவதாக இல்லை.
ஊர் பஞ்சாயத்து ஒன்றும் செய்ய முடிவது இல்லை. இந்த வருடம் விழாவிற்கு ஒரு மாதம் முன்பே தகறாறு வந்து விட்டது. கைகலப்பு. அரிவாள் வெட்டு. திருவாடனை கலங்கி போனது. ஊரே ரெண்டு பட்டு போனது. விழா துவங்க ஒரு நாள் இருந்தது. இரண்டு சமூகமும் எதற்கும் தயாராக இருந்தன.
காலை.. கொடி ஏற்றம்.. இரண்டு சமூக பெரியவர்களும் தயாராக இருந்தனர். பூசாரிக்கு சிக்கல். யாரிடம் முதல் மரியாதையை வழங்குவது என்று.