
கண்ணன் சென்னையில் மேற்கு மாம்பலத்தில் குடி இருந்தார். அவருக்கு அப்பா, அம்மா இல்லை. கல்யாணமும் நடக்க வில்லை. அவரது தொழில் திருடுவது.
அதில் தனக்கென ஒரு திட்டம் வைத்து இருந்தார். தமிழ்நாட்டில் எந்த கோயிலிலும் விசேஷம் நடந்தால் அங்கு போய் விடுவார். சென்னையில் மேற்கு மாம்பலத்தில் வசிப்பதால் அப்பகுதியில் திருட மாட்டார்.
பொதுவாக விஷேசம் நடந்தால் அங்கு அய்யர் வேஷம் போட்டு வடம் பிடிப்போருக்கு அருகிலேயே தாம்பூல தட்டை வைத்து கற்புர தீபாதரனை செய்வார். சமயம் பார்த்து செயின்… முடிந்தால் தங்க கீரிடத்தையும் அபேஸ் பண்ணி விடுவார்.
இன்று மேற்கு மாம்பலத்தில் ஒரு கதாகாலட்சேபம் நடந்து வந்தது. அப்போது கதை சொல்பவர்… கிருஷ்ணன் போட்டு இருந்த நகைகள் பற்றி கூறினார்.
தங்க மாலை
முத்து மாலை
பவள மாலை
வைரம் பதித்த கீரிடம்
தங்க வளையல்கள்
தங்க காதணிகள்
கண்ணன் கேட்டு பிரமித்து போனார். ஸ்ரீ கிருஷ்ணர் நகைகளை திருடி விட்டால் வாழ்நாள் முழுவதும் திருட வேண்டிய அவசியம் இருக்காது.