
கதை 1 - யார் வலியவர்:
ஒரு துறவி தன் சீடர்களிடம் கேட்டார். "உலகிலேயே வலிமை மிக்கவர் யார்..?"
"தன்னைவிட பலசாலிகளுடன் போரிட்டு வெல்பவனே வலிமை மிக்கவன்.." என்றான் ஒரு சீடன்.
மற்றொரு சீடன், "மல்யுத்தம், வில்வித்தை, வாள் பயிற்சி ஆகிய அனைத்திலும் தேர்ந்தவனே வலிமை மிக்கவன்" என்றான்.
வேறொரு சீடனோ, "புலி, சிங்கம் போன்ற கொடிய விலங்குகளை தனி ஆளாக நின்று வேட்டை ஆடுபவனே வலிமை மிக்கவன்.." என்றான்.
அதற்கு துறவி புன்னகையுடன் கூறினார்: "இவர்கள் எல்லாரையும் விட வலிமை மிக்கவன் ஒருவன் இருக்கிறான். கோபம் வரும் வேளையில் எவன் ஒருவன் தன்னையே அடக்கி ஆள்கின்றானோ அவனே உலகிலேயே வலிமை மிக்க மனிதன்.."
சீடர்கள் மனம் தெளிந்தனர்.