
நன்கு அறிவாளியாக இருந்தால் மட்டும் போதாது. ஒரு செயலில் முன்னேற்றம் காண, சூழ்நிலையும், நேரமும் கூட முக்கியம். அவை எப்படி முக்கியம் என்பதை இதிகாச - புராணங்களில் வரும் நிகழ்வு ஒன்றின் மூலமாக தெரிந்து கொள்ளலாமா..?
துரோண மகரிஷியிடம், பஞ்ச பாண்டவர்களும், கௌரவர்கள் நூறு பேர்களும் வில் வித்தையைக் கற்று வந்தனர். துரியோதனனும், தர்மரும் இதில் அடக்கம்.
எந்தவிதமான பாகுபாடும் இன்றி, துரோணர் அனைவருக்கும் வித்தைகளைக் கற்றுக் கொடுத்து வந்தார். ஆனாலும், நல்ல மனமில்லாத, துரியோதனனுக்கு இதில் ஒப்புதல் இல்லை.
உடனே தாத்தா பீஷ்மரிடம் துரியோதனன் சென்று, "தாத்தா! துரோணர், பாண்டவர்களுக்கு, அதிலும் அர்ஜுனனுக்கு சற்று விசேஷமாக பாடம் நடத்துகிறார். இது சரியில்லை. தாங்கள் வந்து துரோணரிடம் நியாயம் கேளுங்கள்" என்றான்.