
1. ஆடையே இல்லாத ஏழையை விட
அரசன் ஒருவன் பெரிய படையை திரட்டினான். பக்கத்து நாட்டை வெல்வதற்கு அந்த படையுடன் பனிபடர்ந்த மலைகளின் வழியே சென்று கொண்டிருந்தான்.
அங்கே ஓரிடத்தில் உடலில் உடை ஏதும் இல்லாமல் துறவி ஒருவர் அமர்ந்திருந்தார்.
ஆளைக் கொல்லும் இந்த குளிரில் ஆடை இல்லாமல் இருக்கிறாரே என்று இரக்கப்பட்டான் அரசன்.
விலை உயர்ந்த தன் போர்வையைக் கழற்றி அவரிடம் தந்தான் ஆனால் அவரோ அதை ஏற்றுக் கொள்ள மறுத்தார். "இந்த குளிரைத் தாங்க இறைவன் எனக்கு போதுமான உடைகளை தந்திருக்கிறான். என்னால் ஆடை இல்லாமல் இந்த குளிரை தாங்க முடியும். யாராவது ஏழைக்கு இந்த போர்வையை தாருங்கள்" என்றார் அவர்.