
கதை 1:
சொற்களின் ஆற்றல்
ஒருவர் தன் சீடர்களிடம், "சொற்களுக்கு ஆற்றல் உண்டு அதனால் பேசும்போது கவனமாக பேச வேண்டும். பேசுவது நடக்கும் என்று நம்பினால் அது அப்படியே நடக்கும்" என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த நாத்திகன் ஒருவன், "கடவுள், கடவுள் என்று உணர்ச்சியுடன் நான் சொன்னால் கடவுள் ஆகி விடுவேனா..!" என்று கிண்டலாகக் கேட்டான்.
உடனே ஞானி, "அறிவு கெட்ட முண்டமே பேசாமல் செல்." என்றார். அதிர்ச்சி அடைந்தவன் கடும் கோபத்துடன் ஞானியை நெருங்கினான்.
"என்னை மன்னித்துவிடு.. ஏதோ கோபத்தில் இப்படி பேசி விட்டேன்" என்றார், ஞானி.
கோபமாக வந்தவன் அமைதி ஆனான். உடனே ஞானி அவனிடம், "முதலில் நான் பேசியதை கேட்டு கோபத்தின் உச்சிக்கு போனாய் அடுத்தது அமைதி ஆனாய். சொற்களுக்கு ஆற்றல் உண்டு என்பதை இப்போதது நம்புகிறாயா..?" என்றார் அவன் தலை குனிந்தான்.