
ஒருமுறை ராவணன் பாதாள லோகத்தை சுற்றிப் பார்க்க சென்றான். பூமியிலிருந்து 6 லோகங்கள் கடந்துதான் செல்ல வேண்டும். அவை எல்லாவற்றையும் கடந்து பாதாள லோகம் சென்றான். பூமிக்குக் கீழே இவ்வளவு அற்புதமான லோகமா என்று அதிசயித்தான். அங்கே தூவாரபாலகனாக ஒரு சிறுவன் நின்றிருப்பதைப் பார்த்து அவனை மதிக்காமல் உள்ளே சென்றான். உடனே அந்த சிறுவன், "ஆஜானுபாகுவான சரீரம் கொண்டவரே! நான் இங்கே இருப்பது தெரியவில்லையா? நீங்கள் நெற்றி முழுவதும் விபூதி அணிந்திருப்பதால் சிவ பக்தர் என்று நினைக்கிறேன். இந்த லோகத்தின் அதிபதி ப்ரக்லாதனின் புத்திரனான மாவலி தான். இந்த லோகத்து அதிபதி. உள்ளே அவர் அனுமதி வாங்கி வருகிறேன். காத்திருக்கவும்," என்று கூறி அனுமதி பெற்று உள்ளே அனுப்பினான்.