
கேட்டதைக் கொடுக்கக்கூடியது கற்பக விருட்சம்! கற்பக விருட்சம் உருவாகக் காரணம் கணபதியின் பேரருள் என்றால் ஆச்சர்யப்படுவீர்கள்!
த்ரேதா யுகத்தின் ஆரம்பகாலம் அது. தண்டகாரண்யம் என்ற வனத்தின் துத்தூரம் என்ற பகுதியில் விப்ரதன் என்ற வேடன் வாழ்ந்து வந்தான். மிருகங்களை வேட்டையாடி தன்னையும் தன் கூட்டத்தினரையும் பசியின்றி பாதுகாத்து வந்தான். திடீரென மழையின்றி வனம் வறண்டது. பறவைகளும், மிருகங்களும் புகலிடம் தேடி வனத்தைவிட்டு அகன்றன. விப்ரதன் தன் கூட்டத்தாருடன் உணவும் தண்ணீரும் இன்றி தவித்தான். வேறு வழியின்றி வழிப்பறிக் கொள்ளையில் இறங்கினான்.
நல்லவர்கள் சந்தர்ப்பவசத்தால் கூட தவறு செய்யலாகாது, என்பதால் அவர்களை தடுத்தாட்கொள்பவன் இறைவன். வழிப்பறியில் ஈடுபட்ட முதல்நாள், முதல் ஆளாக அந்தணன் ஒருவரை பின் தொடர்ந்தான். இதை அறிந்த அந்தணன் ஓட, அவனை துரத்திக்கொண்டு விப்ரதன் ஓடினான். அந்த வனத்தில் ஒரு பாழடைந்த கணபதி கோவிலில் மறைந்தான் அந்தணன். வேடன் கண்ணப்பனை ஆட்கொள்ள காளஹஸ்தி தலத்தில் சிவனார் நடத்தியது போல், இங்கு மகா கணபதி, மகத்துவம் ஒன்றைப் புரிந்தார். அந்த கணபதி கோவிலும், அருகில் இருந்த நதியும் விப்ரதனை பெரிதும் கவர்ந்தன. அதனால் அங்கேயே தங்கிவிட்டான்.