ஆன்மீகக் கதை: அன்னபூரணி வரலாறு!

Annapoorani
AnnapooraniAI Image
இந்திரா கோபாலன்

மங்கையர் மலரின் 40 வருஷத்து வாசகியான எனக்கு படிப்பது எழுதுவது மிகவும் பிடித்த விஷயம். புத்தக வடிவிலிருந்து ஆன் லைன் அவதாரத்தை ம.மலர் எடுத்தபின்பும் என்எழுத்து. ஆர்வத்தை ஊக்குவிக்கும் படி என் படைப்புகளை வெளியிடுவதில்.மகிழ்ச்சி. பி.எஸ சி பட்டதாரியான நான் திருமணத்திற்குப் பிறகு தான் எழுத்துப் பணியைத் தொடர்ந்தேன். ஃபெமினா சவ்வி உமன்ஸ்ஈரரசொசைடி போன்ற பல பத்திரிகைகளில் பல கடிதங்கள் எழுதி பரிசு பெற்றுள்ளேன்.தொடர்ந்து மங்கையர் மலருக்கு படைப்புகளை அனுப்புவதில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்.

Updated on

அன்னபூரணி என்றதும் நம் நினைவிற்கு வருவது காசி மற்றும் ஆதிசங்கரர் அருளிய அன்னபூர்ணா ஸ்தோத்ரம். இவள் வரலாறு மார்க்கண்டேய புராணத்தில் கூறப்பட்டுள்ளது. தேவரும் முனிவரும் வணங்கும் ஈஸ்வரன் தவத்தில் ஆழ்ந்திருந்த சமயம், பார்வதி தேவி விளையாட்டாக அவர் கண்ணைப் பொத்தினாள். சூரிய சந்திரர்களையே கண்களாகக் கொண்டவர் ஈசன். தேவி அவர் கண்களை பொத்தியதால சூரிய சந்திரர்கள் ஒளியிழந்தனர். உலகம் இருண்டது. அனைத்து உயிர்களும் பரமேஸ்வரனிடத்தில் சரணடைந்தன.

அவர் தன் அக்னி மயமான கண்களைத் திறந்து உலகிற்கு ஒளியைக் தந்தார். இவை அனைத்தும் கண்ணிமைக்கும் நேரத்தில் நடக்க, பயந்த பார்வதி தேவி, தான் ஈசனின் கண்களைப் பொத்திய பாவத்திற்கு என்ன பிராயச்சித்தம் செய்ய வேண்டும் எனக் கேட்டாள். அவர் "நமக்கு இந்த கண்ணிமைக்கும் நேரமே என்றாலும் உலக உயிர்களுக்கு அது எத்தனை காலம் தெரியுமா? ஏன் இந்த குறும்புத்தனம்‌? நீ உலகிற்கெல்லாம் அன்னை. ஒரு பாவமும் உன்னை வந்து சேராது," என்றார்.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com