
தன் உண்மையான பக்தனின் பக்தியை உலகம் அறிய செய்ய இறைவனும் சில சோதனைகளை ஏற்கிறார். அந்த உண்மையான பக்தர்களில் ஒருவர் மகான் ஸ்ரீ வாதிராஜர். இவருக்கு அர்ச்சகர்கள் மூலமாக சோதனைகளை தந்தாலும் ஸ்ரீ வாதிராஜரின் உயிரைக் காப்பாற்றி அந்த சோதனையை ஸ்ரீமன் நாராயணனும் ஏற்றுக்கொண்டார். மத்வாச்சாரியார் ஸ்தாபிஞ எட்டு மடங்களில் ஒரு மடத்தின் தலைவராக ஸ்ரீ வாதிராஜர் இருந்தார். அவர் சிறந்த பெருமாள் பக்தர். பெருமாளை ஹயக்ரீவர் அவதாரத்தில் தரிசிக்க ஆவல் கொண்டார். இதனால் தினமும் ஹயக்ரீவரை மனதால் நினைத்து தியானம் செய்வார்.
பெருமாளுக்கு தன் கைப்பட நிவேதனம் செய்து அதை ஆலயத்திற்கு எடுத்து வருவார். பெருமாள் சாப்பிடுவதை மற்றவர்கள் பார்க்கக்கூடாது என்ற காரணத்தால் ஆலயத்தின் கருவறைக்குள் சென்றதும் கருவறையை மூடிவிடுவார். இதை பார்க்கும் மற்ற அர்ச்சகளுக்கு கோபமாக இருக்கும். "நாங்கள் என்ன திருஷ்டியா வைத்து விடுவோம் அல்லது பிடுங்கி தின்று விடுவோமா" என்று கேட்பார்கள்.