சிவபெருமான் மீது கல்லெறிந்தும் கைலாசம் சென்ற சாக்கிய நாயனாரின் கதை!

Sakkiya Nayanar
Sakkiya Nayanar AI Image
Updated on

சாக்கிய நாயனார் இந்தியாவில் தமிழ்நாட்டில் உள்ள நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருச்சங்கமங்கை என்னும் ஊரில் பிறந்தவர். 63 நாயன்மார்களில் சாக்கிய நாயனார் சிவனை வழிபட்ட முறை அளவு கடந்த காதல் மற்றும் பக்தியின் அதிகம் வேறுபட்டிருந்தார்.

சாக்கிய நாயனாருக்கு பிறவியிலிருந்தே பிறப்பு இறப்பு மற்றும் அதனை அடுத்து என்ன? என்ற சந்தேகம் இருந்தது. இதனால் அவருடைய தேடல் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே சென்றது. இதனால் சாக்கிய நாயனார் காஞ்சிபுரம் சென்று பௌத்த மத நூல்களை கற்றார். சாக்கிய வேடம் அணிந்து இருந்ததால் இவர் 'சாக்கியர்' என்று அழைக்கப்பட்டார். இருப்பினும் சாக்கிய நாயனாருக்கு தான் தேடும் தேடலுக்கான விளக்கம் பௌத்த மத நூல்களில் இல்லை என்பதை அறிந்து சைவ சித்தாந்தத்தை அவர் நாடினார். சாக்கிய நாயனாருக்கு சைவ சமயத்தில் சிவபெருமான் மீது அதீத பற்றும் காதலும் இருந்தது.

Loading content, please wait...
logo
Kalki Online
kalkionline.com