
ஒரு முறை செல்வத்தின் அதிபதி லஷ்மிக்கும், சனி பகவானுக்கும் ஒரு தர்க்கம் நடந்தது. லஷ்மி தேவியிடம், சனி பகவான், "நம்மிருவரில் நான் தான் உயர்ந்தவன். உங்கள் கடைக்கண் பார்வையில், நீங்கள் ஒருவனை செல்வந்தனாக மாற்றினாலும், அவன் மீது என்னுடைய பார்வை விழுந்தால், அவன் எல்லாவற்றையும் இழந்து, நடுத்தெருவிற்கு வருவான். ஆகவே, என்னுடைய சக்தி உங்கள் சக்தியை விட அதிகம்." என்றார்.
"ஒருவன் பணக்காரன் ஆவதும், எல்லாவற்றையையும் இழந்து வறியவன் ஆவதும் விதியின் விளையாட்டு. நம்மில் யார் உயர்ந்தவர் என்பதை நாம் எப்படி முடிவு செய்ய முடியும். வேறொருவர் தான் நம் இருவரில் உயர்ந்தவர் யார் என்பதைச் சொல்ல வேண்டும்" என்றாள் லஷ்மி தேவி.
மிகவும் சக்திவாய்ந்த 'ராஜா ஸ்ரீவத்சரிடம்' சென்று கேட்பது என்று இருவரும் முடிவு செய்தனர்.