தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!

தீபம் ஏற்றுவதின் அர்த்தம்!

பொதுவாக நமக்கு மனதுக்கு மகிழ்ச்சி என்றாலும் துன்பம் என்றாலும் ஆன்மீக வழியில் செல்பவர்கள் முதலில் செல்வது அவர்களுக்குப் பிடித்த கோவில்களுக்குத்தான். ஏனெனில் பிடித்த இறைவனால் தான் சக மனிதர்களால் தர முடியாத ஆறுதலையும் மனதில் இருக்கும் பாரத்தை நம்பிக்கையானவரிடம் இறக்கி வைத்த நிம்மதியும் கிடைக்கும் என்பதால். ஆனால் இந்தக் காலத்தில் கோவில்களுக்கு சென்றாலும் நம் மனம் சாந்தமடைவதில்லை பல காரணங்களில் ஒன்றாகிறது. இந்தக் காரணமும்,

நவீனம் பல கோவில்களில் வந்து சேர்ந்தாலும் நம் கோவில்களில் பொதுவாக மின்சார விளக்குகளை கோவிலுக்குள் பயன்படுத்துவதில்லை என கூறலாம். இன்றும் கருவறையில் உள்ளே சாதாரண நெய் விளக்குகளின் ஒளியிலே மட்டுமே நம்மால் அந்த விக்ரகத்தை வணங்க முடியும். அதில் கிடைக்கும் மனநிம்மதி பிரகாசமான மின்விளக்குகள் ஒளியில் நிச்சயம் நமக்கு கிட்டாது .

 கோயிலுக்குள் பிரகாசமான விளக்குகள் வைப்பதில் இறை சாஸ்திரம் நியதிகள் மீறப்பட்டுள்ளது எனலாம். காரணம்  மெய்ஞானமாகும்  பிரம்மபோதத்தை மனிதன் தன் கர்ம வாசனைகளின் சூழலில் மறந்து விடுகின்றான். கோவிலை நம் உடலாக மதிப்பதினால் அங்குள்ள தேவன் இருளால் சூழப்பட்டிருப்பதை உணர வேண்டும் என்பதாலேயே கருவறை முதல் கல்லறை வரை இருட்டில் உறைகிறோம்.  கருவறைக்குள் இருக்கும் தேவவிக்ரகத்தை நெய் இட்டு விளக்கேற்றி ஒளிபெறச்  செய்ய வேண்டும். அதுபோல மனிதனும் தனக்குள்  நிலைகொள்ளும் அஞ்ஞானம் என்ற இருளை அகற்றி ஆத்மாவை நல்ஒளி பெறச் செய்ய வேண்டும் என்பதே  தீபம் ஏற்றுவதின் அர்த்தம்.

மேலும் மித மிஞ்சிய ஒளியானது  நம் கண்களின் ரெடினாவுக்கு தீங்கு விளைவிக்கும் என்பதை நாம் அறிந்திருக்கிறோம். ஆனால் மிதமான சாந்தமான நெய் விளக்கின் ஒலிக் கதிர்கள் கண்களுக்கு நன்மை அளிக்கும் என்பதை அறிவியலும் ஒப்புக்கொள்கிறது. இதிலிருந்து கோவில்களில் உள்ள நெய் விளக்குகளில் இருந்து பிரதிபலிக்கும் சாந்தம் மனதுக்கு உடலுக்கும் நன்மை தரும் என்பதை அறிவோம். 

ஆகவேதான் கோவிலில் உள்ள விக்ரகத்தை நெய் விளக்குகளின் ஒளியில் நேராக நின்று தரிசிக்கும் நமது கண்கள் ஒளி பெற்று நம் மனதின் இருள் அகலும் என்கிறார்கள் ஆன்மீகப் பெரியோர்கள்.

Related Stories

No stories found.
logo
Kalki Online
kalkionline.com