Narasimmar
Narasimmar

அகோபிலத்தில் நவக்கிரகங்களின் சான்னித்யம் உள்ள நவ நரசிம்ம மூர்த்திகள்!

1. அகோபில நரசிம்மர். 

Ahobila narasimhar
Ahobila narasimhar

இவர் குரு பகவானின் அம்சம் உள்ளவர். உக்ரமூர்த்தியாக மலைமீது எழுந்தருளியிருக்கும் புராதனப் பெருமாள் இவரே.

2. பார்கவ நரசிம்மர்

Bargava Narasimha
Bargava Narasimha

சூரியனின் அம்சம் உள்ளவர். இராமரால் வழிபடப்பட்டவர். பார்க்கவ என்பது இராமபிரானின் திருப்பெயர்களுள் ஒன்று.

3. யோகானந்த நரசிம்மர்

Yoganandha Narasimha
Yoganandha Narasimha

சனிபகவானின் அம்சமானவர். மலைமீது தென்கிழக்கு திசையில் நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். பிரக்லாதனுக்கு யோகம் கற்பித்த மூர்த்தி.

4. சத்ரவட நரசிம்மர் 

Chathrvata Narasimha
Chathrvata Narasimha

கேதுவின் அம்சம் உடையவர். கீழ் அகோபிலத்திலிருந்து நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார்.  குடைவடிவில் அமைந்துள்ள கோவிலில் பத்மபீடத்தில் அமர்ந்த வண்ணம்  காட்சி தருகிறார்.  அரியவகை கருங்கல்லால் ஆன திருவடிவம்.

5. க்ரோத  நரசிம்மர்.

Krodha Narasimha
Krodha Narasimha

ராகுவின் அம்சம் உடையவர். பாபநாசினி நதிக்கரையில்  கிழக்கில் லட்சுமி நரசிம்மரும், வராக நரசிம்மரும் கோவில் கொண்டுள்ளனர். இரட்டை நரசிம்மர் தலம் என்ற அவ்விடத்திலிருந்து பார்த்தால்  வேதகிரி, கருடாத்ரி மலைகளுக்கியையேயான பள்ளத் தாக்கைக் காணலாம். வராக குண்டத்திலிருந்து பாபநாசினி  நதி ஓடி வருவதைக் காணலாம்.

6. கராஞ்சி நரசிம்மர்

Karanchi Narasimha
Karanchi Narasimha

சந்திரனின் அம்சம் உள்ளவர். மேல் அகோபிலத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவில் உள்ளார். கராஞ்சி மரத்தடியில் கோவில் கொண்டு கையில் வில் ஏந்தியுள்ளதால்  சாரங்க நரசிம்மர் என்ற இப்பெயர் பெற்றார். 

7. மாலோல நரசிம்மர்

Malola Narasimha
Malola Narasimha

சுக்கிரனின் அம்சம் உள்ளவர்.  மா என்றால் லட்சுமி. லோகன் என்றால் ப்ரியமுடையவன். நரசிம்மரின்  உக்கிரத்தை லட்சுமி தடுத்த படியால் வட்சுமிப் ப்ரியனான பெருமாள் பிராட்டியை மடியில் அமர்த்தியபடி லட்சுமி நரசிம்மராக காட்சி கொடுக்கிறார் அகோபிலத்திலிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் கோவில் கொண்டுள்ளார்.

8. பாவன  நரசிம்மர்

Bhavana narasimhar
Bhavana narasimhar

புதனின் அம்சம் உள்ளவர். பாவனி நதிக்கரையில் கோவில் கொண்டதால் இப்பெயர் பெற்றார்.  அகோபிலத்திலிருந்து  ஆறு கிலோமீட்டர் தொலைவு உள்ள இத்தலத்தில் வருடாந்திர உத்சவம் மிகச் சிறப்பாக நடக்கும்.

இதையும் படியுங்கள்:
50 லட்ச ரூபாய் மதிப்புள்ள கைவிலங்கு! ஒரு வியக்கும் கதை!
Narasimmar

9. ஜ்வாலா நரசிம்மர்

Jwala Narasimhar
Jwala Narasimhar

செவ்வாயின் அம்சம் உள்ளவர். மேரு மலையில்  வீற்றுள்ளார். இரணியனை வதைத்தவர் இவரே. வதைத்த இடமும் இதுதான் என்கிறார்கள்.  இந்த நரசிம்மரை தரிசிக்க மிகக் குறுகிய வழியில்தான் செல்ல வேண்டும். எட்டு கைகளுடனும் நான்கு கைகளுடனும் இரண்டு நரசிம்மர்கள் இங்கு  உள்னனர்.

மலையின் மீது 9 நரசிம்மர்கள் உள்ளதால் நவநரசிம்மர் க்ஷேத்திரம் என்பர். இந்த நவ நரசிம்மர்களையும் தரிசித்தால் நவக்கிரகங்களையும் ஒன்றாக  தரிசித்த பலன் கிடைக்கும்.  கிரகங்களின் அருட் பார்வையும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

logo
Kalki Online
kalkionline.com