சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரையை வந்தடைந்தது. மதுரை சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்வான கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வு நாளை மறுநாள் நடைபெறுகிறது
வைகை அணையில் இருந்து மதுரை சித்திரை திருவிழாவிற்காக 5 நாட்களுக்கு முன்பாகவே தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டதையடுத்து நேற்று முதல் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. மதுரை சித்திரை திருவிழாவிற்காக வைகை அணையில் இருந்து நேற்று (ஏப்.,30) வினாடிக்கு 750 கன அடி வீதம் தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
சித்திரைத் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியை முன்னிட்டு கள்ளழகர் மதுரையை நோக்கி இன்று புறப்படுகிறார். இந்த நிலையில் பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ள காவல்துறை, கள்ளழகரை வைகையாற்றுக்குள் தரிசிக்க 3 புதிய பாதைகள் அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
இந்த நிகழ்வை முன்னிட்டு வைகை அணையிலிருந்து 6 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, கடந்த மாதம் 30-ஆம் தேதி வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட தண்ணீர் மதுரை வைகையாற்று பகுதியை வந்தடைந்தது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வுக்காக ஆறு நாட்களில் விநாடிக்கு 216 மில்லியன் கன அடி தண்ணீர் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் இடத்தை சுற்றி 9 இடங்களில் எல்.இ.டி திரைகள் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், 350 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிப்பு பணி மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.