அற்புதங்கள் புரியும் திருப்பாச்சூர் தங்காதலி வாசீஸ்வரர்!

அற்புதங்கள் புரியும் திருப்பாச்சூர் தங்காதலி வாசீஸ்வரர்!

திருவள்ளூர் அருகே திருப்பாச்சூர் என்ற இடத்தில் உள்ளது மிகவும் பழைமையான அருள்மிகு தங்காதலி வாசீஸ்வரர் திருக்கோயில். இந்தக் கோயிலின் தல வரலாறு மிகவும் ஆச்சர்யத்தித் தருவதாக உள்ளது. இந்தக் கோயிலில் ஆதிசங்கரர் கரங்களால் கல்லில் வரைந்த ஸ்ரீ சக்கரம் உள்ளது. இந்த சக்கரத்தை வரைந்த பின்னரே இக்கோயிலின் அடிக்கல் நாட்டப்பட்டதாம். தட்சனின் மகளாய் பிறந்த பார்வதி தேவி, திருமணம் முடிக்க எண்ணி சிவபெருமானை வேண்டித் தவமிருந்த திருத்தலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

‘தன் காதலியே நான் வந்துவிட்டேன்’ என சிவபெருமான் கூறியதால், இந்தக் கோயில் அம்மன், ‘தங்காதலி’ என அழைக்கப்படுகிறார். மேலும், வேங்கடாஜலபதி குபேரனிடம் தாம் பெற்ற கடனைத் தீர்க்க, சிவபெருமான் ஆலோசனைப்படி இந்த ஆலயத்துக்கு வந்து 11 கணபதிக்கு 11 தேங்காய் மாலை,11 வாழைப்பழ மாலையை அணிவித்து வழிபட, அவரது கடன் தீர்ந்ததாக தல வரலாறு கூறுகிறது.

இந்தக் கோயிலில் ஐயாயிரம் வருட பழைமையான மூங்கில் உள்ளது. மூங்கிலின் உள்ளேதான் சிவபெருமான் சுயம்புவாக உருவானார் என்பது வரலாறு. மேலும், இக்கோயில் சிவபெருமானை, ‘வாசி’ என்ற கோடாரியால் மூங்கிலுக்கு கீழே இருந்து எடுக்கும்போது அவர் மீது ரத்தம் வந்துவிட்டது. ஆதலால், இக்கோயில் சிவலிங்கத்தை தொடாமல்தான் பூஜை செய்கிறார்கள். பசு ஒன்று யாருக்கும் தெரியாமல் சிவனுக்கு பால் சுரந்து கொடுக்குமாம், அப்போது அந்த மூங்கில் தானாக விலகி சிவலிங்கத்தை பசுவுக்குக் காட்டுமாம்.

இந்த ஊரை ஆட்சி செய்து வந்த குருநில மன்னன் ஒழுங்காக வரி கட்டத் தவறியதால் அவன் மீது கரிகால அரசன் பெரும் படையெடுத்தான். ஆனால், போரில் வெற்றி பெறுவதற்காக காளி உருவில் வானில் இருந்து அம்பு மழை பொழிந்ததால் அவனுடைய பெரும்படைகள் அழிந்தது. மீண்டும் கரிகாலன் சிவபெருமானை வேண்டி போரில் வெற்றி பெற்றான். போரில் வெற்றி பெறுவதற்காக காளியை தனியே விநாயகர் மூலம் கட்டிவைத்தார் சிவபெருமான். அந்த காளியின் பெயர் சொர்ண காளி. இந்த காளிக்கு கோயிலில் தனி சன்னிதி உள்ளது.

‘உன்னை இங்கு வரவழைக்கவே போரில் உன்னை ஜெயிக்க வைத்தேன்’ என கரிகாலனிடம் சிவபெருமானே கூறினாராம். இந்தக் கோயிலை கட்ட கரிகாலனுக்கு ஆதிசங்கரர் உதவி புரிந்திருக்கிறார். ஆதிசங்கரர் இத்தலத்துக்கு வந்தார் என்பதற்கு ஆதாரம்தான் அவர் தனது கையால் வரைந்த ஸ்ரீ சக்கரம். இக்கோயிலில் சொர்ண பைரவர் தெற்கு நோக்கி இருக்கிறார். முக்கியமான, இது ஒரு கேது ஸ்தலம் என்பது குறிப்பிடத்தக்கது. மிகவும் அருமையான கோயில். ‘தெய்வமில்லை’ என்று கூறுபவர்கள் இங்கு வந்தால் நிச்சயம் தெய்வத்தை தரிசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com