பரீட்சையில் வெற்றி பெற… நல்ல நினைவுத்திறனைப் பெற வேண்டுமா?

ஹயக்ரீவர்...
ஹயக்ரீவர்...

ம் வீட்டு குழந்தைகளுக்கு பரீட்சை துவங்கும் நேரம் வந்துவிட்டது. குழந்தைகள் கல்வியில் திறந்து விளங்கவும், நல்ல நினைவு திறனை பெறவும் நல்ல மதிப்பெண் பெற்று வெற்றி பெறவும் இந்த இந்த கடவுளை வணங்கினால் அவர்களின் அருள் ஆசியுடன் நல்ல மதிப்பெண்களை பெறலாம். படித்த பாடம் நல்ல மனதில் பதிவதற்கு ஹயக்ரீவரை வணங்க வேண்டும் மந்திரம் இது ஹயக்ரீவர் கடவுளுக்கான மந்திரம் இது

ஞாநாநந்தமயம் தேவம்

நிர்மல ஸ்படிகாக்ருதிம் 

ஆதாரம் சர்வ வித்யாநாம் 

ஹயக்ரீவம் உபாஸ்மஹே!

ஹயக்ரீவரை இந்த மந்திரம் சொல்லி வணங்கும் பொழுது படித்த பாடம் நன்றாக மனதில் பதிந்து நல்ல மதிப்பெண் பெறலாம்.

அடுத்ததாக கூற வேண்டிய மந்திரம் சரஸ்வதியின் அருளைப் பெற வேண்டிய மந்திரம் சரஸ்வதி கல்விக்கு அதிபதி கல்வி கடவுள்

சரஸ்வதி நமஸ்துப்யம் 

வரதே காமரூபிணி

வித்யாரம்பம் கரிஷ்யாமி

 ஸித்திர் பவதுமேஸதா!

இவ்வாறு கூறி சரஸ்வதியை வழிபட படித்த பாடங்கள் நன்றாக மனதில் பதியும் நல்ல நினைவுத்திறன் ஏற்படும் பரீட்சையில் நல்ல மதிப்பெண்களும் கிடைக்கும். அதற்கு அடுத்ததாக நல்ல நினைவு தினம் புத்தி கூர்மையும் பார்வை திறனும் கிடைத்திட சூரிய பகவானை வணங்கிட வேண்டும் சூரிய பகவானுக்கு உள்ள இந்த மந்திரத்தை கூறி வழிபட்டால் போதும்

சூரிய பகவானுக்குரிய மந்திரம்

ஓம் பாஸ்கராய வித்மஹே 

மஹோத்வஜாய தீமஹி

தந்நோ சூரிய பிரஜோத்யாத்!

இந்த மந்திரத்தை கூறி வழிபட சூரிய பகவானால் நல்ல நினைவு திறன் புத்தி கூர்மையும் பார்வை திறனும் கிடைக்கும் 

அதற்கு அடுத்ததாக ஸ்ரீ மேதா தக்ஷிணாமூர்த்தியை வணங்க கல்வியில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்களை பெறலாம்.

இதையும் படியுங்கள்:
சோம்பில் உள்ள சூப்பர் பலன்கள்!
ஹயக்ரீவர்...

மேதா தக்ஷிணாமூர்த்திக்கு உள்ள மூல மந்திரம் இதுதான்

ஓம் நமோ பகவதே தக்ஷிணாமூர்த்தியே

 மஹ்யம் மேதாம் ப்ரஜ்ஜாம் ப்ரயச்ச

                                                    ஸ்வாஹா! 

கல்விக்கு அதிபதிகளான இத்தனை கடவுள்களையும் வணங்கி அவர்களுக்குறிய மூல மந்திரங்களை சொல்லி வழிபட்டு விட்டு பரீட்சை எழுதச் சென்றால் தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறலாம். மாணவச் செல்வங்களுக்கு கடவுளின் பரிபூரண கடாட்சம் கிடைக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com