
மார்கழி மாதத்தில் பிரம்ம முகூர்த்த நேரத்தில் விளக்கு ஏற்றினால் நினைத்த காரியம் உடனே நடக்கும். மார்கழி மாதம் கிருஷ்ணருக்கு மிகவும் பிடித்த மாதமாகும். பொதுவாகவே பன்னிரண்டு மாதங்களில் ஆறு மாத காலம் தேவர்களுக்கு பகல் பொழுதாகவும் மற்றொரு ஆறு மாத காலம் அவர்களுக்கு இரவு பொழுதாகவும் இருக்கும்.
மார்கழி மாதம் முழுவதும் அதிகாலையில் எழுந்து தலைக்கு குளித்த பிறகுதான் இந்த பிரம்ம முகூர்த்த விளக்கை ஏற்ற வேண்டும். இந்த நாளில் மொத்தம் ஐந்து விளக்குகளை ஏற்ற வேண்டும் .குறிப்பாக இந்த நாளில் நெய் விளக்கு ஏற்றினால் மிகவும் நல்லது. ஒருவேளை நெய் விளக்கு ஏற்ற முடியவில்லை என்றால் நல்லெண்ணையில் ஒரு சொட்டு நெய் சேர்த்து விளக்கு ஏற்ற வேண்டும். அது மட்டும் இன்றி பஞ்சமுகூர்த்த எண்ணெய் என்று சொல்லப்படும் ஐந்து விதமான எண்ணெய் கொண்டும் இந்த நாளில் விளக்கு ஏற்றலாம்.
பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றும்போது கடவுள் உங்கள் வேண்டுதலை கேட்கும்படி உருக வேண்டும். அதுபோல் இந்த விளக்கு ஏற்றினால் வேலை தேடுபவருக்கு நல்ல வேலை, திருமணமாகாதவர்களுக்கு விரைவில் திருமணம் கைகூடும். புத்திர பாக்கியம் உண்டாகும்.
நமக்குள் பஞ்சபூதங்கள் இருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் இயற்கையில்தான் இறைவன் கலந்திருப்பதால் அதை உணர்த்தும் விதமாகவே ஐந்து விளக்கு ஏற்றப்படுகிறது. அது மட்டும் இன்றி மார்கழி மாதம் பூஜை அறையில் பிரம்ம முகூர்த்த விளக்கு ஏற்றுவது மிகவும் நல்லது. அதிகாலை 3 மணி முதல் ஆறு மணி வரை பிரம்ம முகூர்த்த நேரம் ஆகும். ஒரு வேளை உங்களால் மூன்று மணிக்கு எழும்ப முடியவில்லை என்றால் அதிகாலை நாலு மணிக்கு எழுந்து குளித்துவிட்டு நாலு முதல் ஆறு மணிக்குள் விளக்கு ஏற்றலாம்.