வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் !

வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திரம் !

பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வடபழனி முருகன் கோவிலில் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வடபழநி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. ஏப்ரல் 5ம் தேதி முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரத்துடன் வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியும் நடக்கிறது

இதில் லட்சார்ச்சனை காலை 7:00 மணிக்கு துவங்கி நண்பகல் 12:30 மணிவரையிலும், மாலை 5:30 மணிக்கு துவங்கி இரவு 9:00 மணி வரை நடைபெறுகிறது. இதில், பங்கேற்க விருப்பமுள்ள பக்தர்களிடம், அர்ச்சனை ஒன்றுக்கு 150 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அவர்களுக்கு லட்சார்ச்சனை பிரசாதமும் வழங்கப்படும்.

தமிழ் மாதம் 12வது மாதம் பங்குனியும், 12வது நட்சத்திரமான உத்திரமும் இணையும் சிறப்பான நாள் பங்குனி உத்திரம். மேலும் பங்குனி மாதத்தில் உத்திர நட்சத்திரமும் பௌர்ணமி திதியும் சேர்ந்து வருவது தான் பங்குனி உத்திரம் என்று சொல்லப்படுகிறது.

அதன் படி இந்த மாதம் உத்திர நட்சத்திரம் நேற்று (4 ம் தேதி) காலை 10.17க்குத் தொடங்கி இன்று (5 ம் தேதி ) பகல் 11.58 வரை நீடிக்கிறது. சில சிவாலயங்களிலும் இன்று பங்குனி உத்திரம் கொண்டாடப்படுகிறது.

அதன்படி, சென்னை வடபழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, ஏப்ரல் 1ம் தேதி முதல் 3ம் தேதிவரை லட்சார்ச்சனையும், 5ம் தேதி முதல் மூன்று நாட்கள் தெப்பத் திருவிழாவும் நடக்கிறது. இன்று முதல் 7ம் தேதி வரை மூன்று நாட்கள், இரவு 7:00 மணிக்கு தெப்பத் திருவிழா சிறப்பு அலங்காரத்துடன் வேதபாராயண, நாதஸ்வர கச்சேரியும் நடக்க உள்ளது.

வடபழனி முருகன் கோவிலில் நட்சத்திர கணக்குப்படி பங்குனி உத்திரப்பூஜை நேற்றைய தினமே பூஜைகள் முடிவடைந்துள்ளன. ஆனால் இன்று 10:16 மணிக்கு மேல் தான் பௌர்ணமி தொடங்குவதால் இன்று காலை 10:30 மணி முதல் 11:30 மணி வரை பூஜைக்கான சிறப்பான நேரம் என்பதால் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

இதையடுத்து பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து முருகனை தரிசனம் செய்தனர். பால் குடங்கள் எடுத்து வந்தும் தங்கள் நேர்த்திக் கடன்களை செலுத்தினர். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால் முறையாக தடுப்புகள் அமைத்து கோவிலை சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு விடாத வண்ணம் காவல்துறையினர் தொடர் பாதுகாப்பில் ஈடுபட்டனர்.

.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com