வேண்டியவர்களுக்கு வேண்டியதை வழங்கும் வைக்கத்தப்பன் கோவில்!

Vaikom sree mahadeva temple
Vaikom sree mahadeva templeImage Credits: Maalaimalar
Published on

க்தர்கள் வேண்டியதை வழங்க கூடியதாக கேரள மாநிலத்தில் கோட்டையம் மாவட்டத்தில் உள்ள வைக்கம் நகரில் அமைந்துள்ள வைக்கத்தப்பன் கோவில் திகழ்கிறது.

ஒருமுறை ‘கரன்’ என்னும் அசுரன் சிவபெருமானிடம் முக்தி வேண்டி கடும் தவம் இருந்தான். அவனுடய தவத்தில் மகிழ்ந்த சிவன் அவனிடம் மூன்று சிவலிங்கங்களை கொடுத்து இதனை மூன்று இடங்களில் நிறுவி வழிப்பட்டால் முக்தி கிடைக்கும் என்று கூறினார். பின்பு புலிக்கால் முனிவரான வியாக்ரபாதரை அவனை பின் தொடரும்படி அனுப்பி வைத்தார். ஒரு லிங்கத்தை வலது கையிலும், மற்றொரு லிங்கத்தை இடது கையிலும் இன்னொன்றை வாயிலும் எடுத்துச் சென்று கொண்டிருந்தான்.

பயணக்களைப்பால் ஓய்வெடுக்கும்போது வலதுகையில் இருந்த சிவலிங்கத்தை ஓரிடத்தில் வைத்தான். திரும்பி எடுக்க முயற்சித்தபோது முடியாமல் போனது, அப்போது அந்த இடத்திற்கு வந்த வியாக்ரபாதரிடம் அந்த சிவலிங்கத்தை பூஜித்து வழிப்படும்படி வேண்டினார். அதனை ஏற்ற வியாக்ரபாதரும் வெகுகாலம் அந்த சிவலிங்கத்தை வழிப்பட்டார். பின்னர் அசுரன் தன்னிடம் இருந்த சிவலிங்கங்களை வேறு இடங்களில் நிறுவி பூஜை செய்து முக்தி பெற்றான்.

வியாக்ரபாதர்
வியாக்ரபாதர்

பிற்காலத்தில் பரசுராமர் வான்வழியில் வடக்கு திசை நோக்கி பயணம் செய்து கொண்டிருந்தபோது கீழே பார்த்தார். அங்கே நாவல்பழ நிறத்தில் சிவலிங்கம் நீரில் மூழ்கியிருப்பது தெரியவந்தது. அதை எடுத்து பீடம் அமைத்து வழிபட தொடங்கினார். அந்த சிவலிங்கம்தான் கரன் என்னும் அசுரனால் வலது கையில் எடுத்து வரப்பட்டு வியாக்ரபாதர் முனிவரால் வழிப்பட்ட சிவலிங்கம் என்று வைக்கம் கோவிலின் தலவரலாறு குறித்து பார்கவ புராணம் கூறுகிறது.

இந்த கோவிலில் இரண்டு அடி உயர பீடத்தில் நான்கு அடி உயர சிவலிங்கம் கிழக்கை நோக்கி அமைந்துள்ளது. மூலவர் மகாதேவராவார். ஆனால் எல்லோரும் அழைப்பது ‘வைக்கத்தப்பன்’ என்னும் பெயரில்தான். புலிக்கால் முனிவரான வியாக்ரபாதர் வழிப்பட்டதால் வியாக்ரபுரீஸ்வரர் என்றும் அழைப்பதுண்டு.

இந்த கோவிலில் அம்மனுக்கு என்று தனி சன்னதியில்லை. கோயிலுக்கு பின்புறம் இருக்கும் விளக்கில் எண்ணெய் ஊற்றி வழிபட்டால் அம்மனை தரிசித்த முழுபலன் கிடைக்கும் என்பது ஐதீகம். இக்கோவிலில் சிவபெருமானுக்கு அனைத்து சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன. அதுபோலவே இக்கோவிலில் அம்மன் இல்லையென்றாலும் 12 வருடத்திற்கு ஒருமுறை 12 நாட்கள் மட்டும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைப்பெறுகின்றன.

இதையும் படியுங்கள்:
தில்லை காளியின் வரலாற்றை தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Vaikom sree mahadeva temple

ஆலயத்தின் வெளிப்புறத்தில் தென்கிழக்கில் ஆலமரத்தோடு அமைந்துள்ள மேடையை வியாக்ரபாதர் மேடை என்று அழைக்கிறார்கள். வியாக்கரபாதருக்கு சிவப்பெருமான் இங்குதான் காட்சியளித்தார். தனக்கு காட்சியளித்த நாளில் இங்கு வந்து வேண்டும் பக்தர்களுக்கு வேண்டிய வரத்தை தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார் என்று தலபுராணம் கூறுகிறது.

இக்கோவிலில் வியாக்ரபாதருக்கு சிவபெருமான் காட்சிக்கொடுத்த நாளான கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி நாளில் வைக்கத் அஷ்டமி என்ற விழா சிறப்பாக நடைப்பெறுகிறது. எனவே இக்கோவிலுக்கு ஒருமுறையாவது சென்று தரிசித்துவிட்டு வருவது சிறப்பாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com