- ஆர்.சாந்தாசெய்யூர் என அழைக்கப்படும் சேயூரில் கரியமாணிக்கப் பெருமாள் திருக்கோயிலுக்கும், வன்மீகநாதர் கோயிலுக்கும் நடுவே கந்தசுவாமி திருக்கோயில் உள்ளது. முருகனின் சன்னிதிக்கு நேரெதிரில் கல்லினாலான தீபஸ்தம்பமும், கருவறைக்குள் சுவீரன், சுஜனன் ஆகிய துவாரபாலகர்களின் சிலைகளும் உள்ளன. ஒரு முகத்துடன், நான்கு திருக்கரங்களுடன், வள்ளி, தெய்வானையுடன் நின்ற திருக்கோலத்தில் கருவறையில் கந்தசுவாமி காட்சியளிக்கிறார்.பொதுவாக, சிவாலயங்களில் கருவறையைச் சுற்றிலும் வினாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா, துர்கை திருமேனிகளே கோஷ்ட தெய்வங்களாக இடம்பெறும். ஆனால், செய்யூர் கந்தசுவாமி திருக்கோயிலில் நர்த்தன வினாயகருக்குப் பதிலாக பிரம்ம சாஸ்தாவும், லிங்கோத்பவருக்குப் பதிலாக பாலஸ்கந்தரும், பிரம்மாவிற்குப் பதிலாக சிவகுருநாதரும், துர்கை அம்மனுக்குப் பதிலாக வேடவன் உருவில் புலிந்தரும் இடம் பெற்றுள்ளனர். இதனால் கந்தசுவாமியின் கருவறையை ஒருமுறை வலம் வருவோர் ஏழு வித்தியாசமான முருகன் திருமேனிகளை வலம் வந்த புண்ணியத்தை அடைவர். வன்னியும், கருங்காலியும் தல விருட்சங்கள்..திருக்கோயிலின் நான்கு சுவா்களிலும் 27 வேதாளங்களின் உருவங்கள் பதிக்கப்பட்டிருப்பது சிறப்பு. இந்தக் கோயிலில் 27 நட்சத்திரங்களுக்குமான 27 வேதாளங்களைக் குறிப்பிட்டு, தேய்பிறை அஷ்டமி நாட்களில் அவற்றுக்கு வழிபாடு நடைபெறும் அதிசயம் எங்கும் காணக் கிடைக்காத ஒன்றாகும். சிவகணங்களே வேதாள வடிவங்கொண்டு வேலவனை வணங்கியதாக அருணகிரிநாதர் பாடியுள்ளார். முருகப் பெருமானைச் சுற்றிலும் திருக்கோயிலின் மதிலில் ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒன்றாக 27 பூத கண வேதாளங்கள், தங்கள் இரு கரங்களையும் மேலே தூக்கியபடி அமைந்திருப்பது காணக்கரிய காட்சியாகும். 27 நட்சத்திர வேதாளங்களும் சூழ்ந்து நின்றபடி முருகனை வழிபடுகின்றன.வேதாளங்கள் பைரவருக்கு மட்டுமே கட்டுப்படும் என்பதால் பைரவருக்குரிய தேய்பிறை அஷ்டமி தினங்களில், அவரவர் நட்சத்திரத்திற்குரிய வேதாளங்களை வழிபட்டு தங்களது பிரார்த்தனைகளை பைரவர் மூலமாக முருகப் பெருமானிடம் சேர்த்து விடுகின்றனர் பக்தர்கள். அதன்பின் தங்களது கோரிக்கை நிறைவேறுவது இப்பகுதி மக்களின் அனுபவமாக உள்ளது..தேய்பிறை அஷ்டமியன்று மாலை 5 மணிக்குத் துவங்கும் பூஜை இரவு 8 மணிக்கு நிறைவடையும். அன்று சுற்றிலுமுள்ள பல்வேறு கிராம மக்கள் இக்கோயிலுக்கு வந்து முருகனை வணங்குகின்றனர். ஒவ்வொரு வேதாளத்திற்கும் செவ்வரளி பூக்களால் அர்ச்சனை, மாலை 7 மணிக்கு மூலவர் அபிஷேகம், இரவு 8 மணிக்கு 8 வித மலர்களால் பைரவருக்கு அர்ச்சனையும் நடைபெறுகின்றன.அஸ்வினி நட்சத்திரம் முதல் ரேவதி நட்சத்திரம் வரைக்குமான 27 வேதாளங்கள்:1. நாகாயுதபாணி, 2. வஜ்ரதாரி, 3. வைராக்ய, 4. கட்கதாரி, 5.ஞான, 6. தோமர, 7. வக்ரதந்த, 8. விசாலநேத்ர, 9. ஆனந்த பைரவ பக்த, 10.ஞானஸ்கந்த பக்த, 11. தர்ப்பகர, 12. வீரபாகுசேவக, 13. சூரபத்ம துவம்ச, 14. தாரகாசுர இம்ச, 15. ஆனந்த குகபக்த, 16. சூரநிபுண, 17. சண்டகோப, 18. சிங்க முகாசுர இம்ச, 19. பராக்ரம,20. மஹோதர, 21. ஊர்த்துவ சிகாபந்த, 22. கதாபாணி, 23. சக்ரபாணி, 24. பேருண்ட, 25. கோரரூப, 26. குரு பைரவ சேவக, 27.குரோதன பைரவ சேவக என இருபத்தேழு நட்சத்திரங்களின் வேதாளங்களின் பெயர்களும் பட்டியலிட்டு மக்களின் வசதிக்காக வைக்கப்பட்டுள்ளது.சூரசம்ஹார உத்ஸவத்தை ஒட்டி, பூராட நட்சத்திரத்திற்குரிய வேதாளத்திற்குப் பின்புறம் நடைபெறும் வேலை வாங்கும் விழாவில் பக்தர்கள் திரளாகக் கூடுகின்றனர்.அமைவிடம்: காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத்திற்கு தென்கிழக்கே 29 கி.மீ., கிழக்குக் கடற்கரைச் சாலையில் மரக்காணத்திற்கு வடக்கே எல்லையம்மன் கோயில் நிறுத்தத்திலிருந்து மேற்கில் 5 கி.மீ. தொலைவில் கோயில் அமைந்துள்ளது.