வெள்ளிமலை முருகன் கோயில் வரலாற்று சிறப்புகளும் மகிமைகளும்!

வெள்ளிமலை முருகன் கோயில் ...
வெள்ளிமலை முருகன் கோயில் ...

தலவரலாறு:

1200 ஆண்டுகளுக்கு முன்னர் வெள்ளிமலை கிராமம் அடர்ந்த காடுகளாக இருந்தது. அப்போது ஒரு துறவி அந்த மலையில் உள்ள ஒரு குகையில் வாழ்ந்து வந்தார். நோய்வாய்பட்ட மக்கள் தன்னைச் சந்திக்கும்போது அவர்களைக் குணப்படுத்தும் தெய்வீகச் சக்தி அந்தத் துறவிக்கு இருந்தது. அவரைப் பார்க்கவே ஏராளமான மக்கள் படையெடுத்து வருவார்கள். அப்போது ஒரு நாள் அவர் அங்கிருந்து மலை உச்சிக்குச் சென்று அதிசயமாகக் காணாமல் போனார். அவரே கடவுள் என்று மக்கள் நம்பினர். இங்குள்ள தல விருட்சம் வெப்பாலை.

கோயிலின் அமைப்பு

வெள்ளிமலை மலையின் உச்சியில் கோயில் கட்டப் பட்டுள்ளது. கோயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கர்ப்பக்கிரகத்தின் மீதுள்ள கோபுரம் ஒரு இனிமையான காட்சியை அளிக்கிறது. கோயிலின் மூலையில் சித்தி விநாயகர் சன்னிதி அமைந்துள்ளது.

முருகப் பெருமானின் இளமைப் பருவத்தைப் புன்னகையுடனும், அமைதியான பார்வையுடனும் பிரதிபலிக்கும் வகையில் பிரதான தெய்வமானது கோயில் கர்ப்பக்கிரகத்தில் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்தத் தெய்வத்தின் வசீகரத் தோற்றம்  பார்ப்பவர்களை இந்த உலகத்தை மறந்து, சர்வ வல்லமை படைத்த முருகப் பெருமானின் சொர்க்க சுகத்தில் கரைய முயலும். இம்மாவட்டத்தில் உள்ள வேறு எந்த முருகக் கடவுளுக்கும் இந்தத் தெய்வத்தின் மயக்கும் தோற்றம் இணையாகாது என்றுதான் பக்தர்கள் சொல்வார்கள்.

கோயிலின் மகிமை

முருகப் பெருமான் பாகுபாடின்றி அனைவருக்கும்
அருள்பாலிப்பதால்தான் இப்புனிதத் தலத்தில் யாதொரு வேண்டுதல் செய்தாலும் தடைகள் நீங்கி மகிழ்ச்சியை அடைவர். நோய்வாய்பட்டவர்கள் சில நாட்கள் இங்கு தங்கினால் அதிக நிவாரணம் கிடைக்கும். இந்த மலைக் கோயிலுக்குப் புனித தரிசனம் செய்வதன் மூலம் மனஉளைச்சல் மற்றும் கவலைகள் குறையும்.

முருகப் பெருமான்...
முருகப் பெருமான்...

ஒவ்வொரு தமிழ் மாதத்திலும் கடைசி வெள்ளிக்கிழமை புனிதமான நாளாகக் கருதப்படுகிறது. இங்கு பிரசாதமாக கஞ்சி வழங்கப்படுகிறது. இந்தக் கோயிலின் முக்கிய திருவிழாவாக கந்தசஷ்டி விழா  கொண்டாடப்படுகிறது. கர்ப்பிணிப் பெண்கள் இந்தக் கோயிலில் வணங்கும்போது ஆரோக்கியமான குழந்தைகளைப் பெற்றெடுப்பார்கள் என்ற நம்பிக்கை மக்களிடம் நிலவுகிறது. அமாவாசை, வைகாசி விசாகம் போன்ற நாட்களில் இங்குள்ள தீர்த்தக்கிணறில் நீராடி சஷ்டி கவசத்தைத் தவறாது ஓதிவந்தால் பிள்ளைப்பேறு இல்லாதவர்களுக்கும் பிள்ளைகள் கிடைக்கும், கடன் தொல்லை இருப்பவர்கள் அதில் இருந்து விடுபடுவர் என்பது முன்னோர் வாக்காக உள்ளது. இந்தக் கோயிலில் சிறப்பு அம்சமாக சித்திரை மாதம்
10ம் தேதி சூரியனின் ஒளி முருகனின் காலில் விழும். இது ஆண்டுதோறும் நடக்கும் அற்புத நிகழ்வாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
உங்கள் திறமைகளை வெளிக்காட்டத் தயங்காதீர்கள்!
வெள்ளிமலை முருகன் கோயில் ...

முற்றிலும் நெற்கதிர்களால் உருவாக்கப்பட்ட, அலங்காரப் பொருள் போன்ற விசிறியை மேல் கூரையில் நாம் பார்க்கலாம். பக்தர்கள் தங்கள் முதல் அறுவடையில் விளைந்த கதிரை முருகப் பெருமானுக்குப் படைப் பதற்காகக் கொண்டுவந்து இங்கு கொடுப்பார்கள். மேலும், பௌர்ணமி கிரிவலம், பிரதோஷம், திருவாதிரை நாட்களில் சிறப்பு அபிஷேகம் நடக்கும்

மலை உச்சியில் உள்ள வேப்பிலை கசப்பு தன்மை இல்லாமல் கருவேப்பிலையின் சுவையுடன் இருப்பது இந்தக் கோயிலின் தனிச் சிறப்பு.

கோயிலின் மலை உச்சியில் நின்று பார்க்கும்போது குமரி மாவட்டத்தின் ஒட்டுமொத்த அழகையும் நாம் கண்டு ரசிக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com