ஒரு வருடத்தில் பண்டிகைகள், பூஜைகள், விரதங்கள் என்று பல விஷயங்கள் இருந்தாலும், சுமங்கலிகளால் மிகவும் போற்றப்படுவது, கேதார கௌரி விரதம். இந்த விரதத்தை புரட்டாசி மாதம், சுக்ல பக்ஷ அஷ்டமி நாள் அன்று தொடங்கி, ஐப்பசி மாத அமாவாசை வரை மொத்தம் இருபத்தியொரு நாட்கள் அனுசரிக்க வேண்டும் என்று ஸ்காந்த புராணம் கூறுகிறது. கேதாரம் என்பது இமயமலைச்சாரல் பகுதியைக் குறிப்பதாகும். அதாவது, மலையைச் சார்ந்த இயற்கை வளம் சூழ்ந்த பகுதியை கேதாரம் என்பர். சக்தி ரூபமான பார்வதி தேவி சிவனை நினைத்து வழிபட்டு அதன் பலனாக அர்த்தநாரீயாகவும், அர்த்தநாரீசுவராகவும் ஒன்றுபட்ட தினமே கேதார கௌரி விரத தினமாகும்.இந்த விரதத்தை உமையவள் மேற்கொண்டதற்கு ஒரு புராணக்கதை உள்ளது. பிருங்கி முனிவர் தீவிர சிவ பக்தர். சிவனைத் தவிர வேறு யாரையும் வணங்க மாட்டார். இதனால் உமையவள் மிகவும் வருத்தம் கொண்டாள். தன் பதியை மட்டுமே வணங்கும் முனிவர், தன்னை வணங்காமல் இருப்பதை அவளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. அம்முனிவர் தன்னையும் சேர்த்து வணங்க வேண்டும் என ஆவல் கொண்டாள். அதனால் பதியோடு மிகவும் நெருக்கமாக அமர்ந்து இருந்தாள் பார்வதி தேவி. எப்படியும் முனிவர் இன்று தன்னையும் சேர்த்து தான் வலம் வருவார் என்று நம்பிக்கையோடு அமர்ந்திருந்தாள்.வழக்கம் போல் பிருங்கி முனிவர் வந்தார். சிவனோடு உமையவள் நெருங்கி வீற்றிருப்பதைக் கண்டு, ஒரு வண்டாக உருவெடுத்தார். இருவருக்கும் இடையே புகுந்து சிவனை மட்டும் வலம் வந்தார். இதைக் கண்டு வெகுண்டாள் தேவி. ‘சக்தி இல்லையேல் சிவம் இல்லை’ என்பதை பிருங்கி முனிவருக்கு உணர்த்த வேண்டும் என்று மனதில் ஒரு சபதம் எடுத்துக் கொண்டாள். கௌதம முனிவரை அணுகி, தனக்கு ஏற்பட்ட அவமானத்தை விளக்கி, சிவனுடன் ஐக்கியமாக என்ன செய்ய வேண்டும் என்று வேண்டினாள். முனிவரும், ‘சிவபெருமானை குறித்து விரதம் இருந்தால் 21வது நாள் நினைத்தது நடக்கும்’ என்று கூறினார்.கேதாரத்தில், சிவபெருமானைக் குறித்து ஆழ்ந்த தவத்தில் பார்வதி தேவி ஈடுபட்டாள். அவளது பக்தியை மெச்சிய ஐயன், 21வது நாள் காட்சி கொடுத்தார். ‘என்ன வரம் வேண்டும்?’ என்று ஈஸ்வரன் கேட்டபொழுது, 'நான் என்றுமே தங்களை விட்டு பிரியாமல், தங்களுடனேயே இருக்க வேண்டும்' என்று வரம் கேட்டாள் பார்வதி. 'அப்படியே ஆகட்டும்' என்று கூறிய முக்கண்ணன், தனது சரீரத்தில் பாதி பாகத்தை உமையவளுக்குக் கொடுத்தார். ‘அர்த்த’ என்றால் பாதி, ‘நாரீ’ என்றால் பெண். தன் சரீரத்தில் பாதியை தன் பத்தினிக்குக் கொடுத்து, ‘அர்த்தநாரீஸ்வரர்’ எனப் பெயர் பெற்றார். அன்னை கௌரி விரதம் இருந்து நினைத்த காரியத்தை சாதித்துக் கொண்டதினால் இந்த கேதார கௌரி விரதத்தை சிரத்தையோடு செய்பவர்களுக்கு நினைத்த காரியம் நிறைவேறும் என்பது நம்பிக்கை..புரட்டாசி மாத சுக்ல பக்ஷ சப்தமியன்றே பூஜை அறையைச் சுத்தம் செய்து, சிவனும் அம்பாளும் இருக்கும் படங்கள் அல்லது பிரதிமைகளைத் துடைத்து வைத்து வழக்கமாக பூஜைக்கு என்னென்ன பொருட்கள் தேவையோ அனைத்தையும் தயார் செய்து வைத்துக்கொள்ள வேண்டும். எல்லா பூஜைகளுக்கும் எப்படி முதலில் ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்வோமோ, அதேபோல் இந்த பூஜைக்கும் ஒரு மஞ்சள் பிள்ளையாருக்கு பூஜை செய்ய வேண்டும். 21 இழைகள் கொண்ட நோன்பு சரட்டை, பூஜையில் வைக்க வேண்டும். சிலர் கடைகளில் 21 முடிச்சுகள் போட்ட நோன்புச் சரட்டினை வாங்கி பூஜையில் வைக்கிறார்கள். அவ்வாறு அல்லாமல் ஒவ்வொரு நாளும் அந்த பூஜை சரட்டிற்கு ஒவ்வொரு முடிச்சு வீதம் போட்டு, அதன் மேல் கொஞ்சம் சந்தனம், குங்குமம் வைக்க வேண்டும். (மனதில் என்னென்ன பிரார்த்தனைகள் உண்டோ, அத்தனையும் நினைத்து அந்த முடிச்சைப் போட வேண்டும்). 21 நாட்கள் வரை 21 முடிச்சுகள் அந்த நோன்பு சரட்டில் போடுவது நல்லது. விரதம் மேற்கொள்ளுபவர்கள், தாங்கள் சாதிக்க வேண்டியவற்றை நினைத்து நோன்புச் சரட்டினில் முடிச்சு போடும்பொழுது அந்த நோன்பு சரட்டிற்கு அதீத சக்தி வருவதாக ஆன்றோர்கள் கூறுகிறார்கள்.பெண்களுக்கு 21 நாட்களும் சௌகரியமான நாட்களாக அமையாது. இயற்கை உபாதைகள் இருக்கும். அதனால் நிறைய பேர்கள், ஏழு நாள், மூன்று நாள் இப்படி நோன்பு நாட்களைக் குறைவான கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும்.சிலர் 21வது நாளான கேதார கௌரி விரதம் அன்று மட்டுமே இந்த பூஜையை செய்கிறார்கள். 21 முடிச்சுகள் போட வேண்டும் என்றால் ஒவ்வொரு நாளைக்கும் எத்தனை முடிச்சு போட வேண்டும் என்பதை கணக்கு செய்து கொண்டு விரத நாட்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப முடிச்சுகள் போட வேண்டும்.சிவபெருமான் பார்வதி தேவி பிரதிமைகள் இருந்தால் அவற்றுக்கு என்னென்ன அபிஷேகங்கள் செய்ய முடியுமோ அவற்றைச் செய்யலாம். பிரதிமையோ படமோ எதுவாக இருந்தாலும், சந்தனம், குங்குமம் வைத்த பிறகு, பூச்சரட்டினை மாலையாக அணிவிக்க வேண்டும். வஸ்திரம், அணிகலன் இருந்தால் சார்த்த வேண்டும்.சிவ துதிகள் பாடலாம். சிவ அஷ்டோத்திரம் படித்து புஷ்பங்களால் அர்ச்சனை செய்யலாம். பூஜை, ஸ்லோகங்கள் சொல்லி முடித்த பிறகு தூப தீப ஆராதனை செய்ய வேண்டும். விரதம் இருப்பவர்கள், விரதம் முடியும் வரை, புளிப்பு பண்டங்கள் எதையும் சாப்பிடக் கூடாது. நைவேத்தியத்திற்குப் படைத்த பண்டங்களை ஆகாரமாக எடுத்துக் கொள்ளலாம். பார்வதி தேவி 21 நாட்களும் நீர், ஆகாரம் இல்லாமல் நோன்பினை மேற்கொண்டாள் என்று புராணங்கள் கூறுகின்றன. ஆனால், நடைமுறையில் சாத்தியம் இல்லாததால், விரதத்தில் சில சலுகைகள் அனுசரிக்கப்படுகின்றன. பூஜை முடியும் கடைசி நாள் அன்று நைவேத்தியத்திற்கு21 வகையான பண்டங்கள் சமர்ப்பிக்க வேண்டும். இது சமைத்ததாகவும் இருக்கலாம். சமைக்காமல் உண்ணும்படியான பதார்த்தமாகவும் இருக்கலாம்.விரதம் முடிந்த பின் நோன்புச் சரட்டினை, கணவர் மனைவியின் கையில் கட்டி விடுதல் சாலச்சிறந்தது. கணவர் வெளியூரில் இருப்பவராக இருந்தால், வீட்டில் மூத்த சுமங்கலிகள் இளைய சுமங்கலிகளுக்கு இச்சரட்டினை கட்டிவிடலாம். மணமாகாத பெண்களுக்கு தாயாரோ, பாட்டிமார்களோ கட்டி விடலாம். கௌரியானவள், கணவனிடமிருந்து எந்நாளும் பிரிக்க முடியாத பந்தத்தை உருவாக்கிக் கொண்ட நாள்தான் கேதார கௌரி விரத நாள். திருமணமான பெண்கள், தங்கள் மாங்கல்யம் மங்களகரமாக இருக்க வேண்டியும், மணமாகாத கன்னிப் பெண்கள் நல்ல மாங்கல்ய வாழ்வை (கணவனை) வேண்டியும் இந்த விரதத்தை அனுஷ்டிக்கின்றனர்.எந்த விரதத்தை மேற்கொண்டாலும் அதற்கு உண்டான காரணத்தை நன்கு அறிந்து சிரத்தையோடு பின்பற்றுவோமேயானால், அதற்கு உண்டான பலன் நிச்சயம் உண்டு. அர்த்தநாரீஸ்வரர் எல்லோருக்கும் மங்களகரமான வாழ்க்கை அமையும்படி அருள் செய்யட்டும்.