அப்பனே பிள்ளையாரப்பா!

Vinayagar chathurthi festival...
Vinayagar chathurthi.Image credit - pixabay
Published on

ப்பனே பிள்ளையாரப்பா! காப்பாத்து!" என்று மனதார வேண்டினால்,  கைகொடுக்கும் கடவுள் பிள்ளையார் ஆவார்.நாதமாகிய "ஓம்"எனும் பிரணவ ஒலிக்கும், பிள்ளையாருக்கும் அழிவே கிடையாது.

 பிள்ளையாரின் உருவ அமைப்பும், தத்துவமும்:-

பிள்ளையாரின் இடுப்புக்கு மேல் கழுத்து வரை தேவ உடம்பு.இடுப்புக்கு கீழ் மனித உடம்பு. யானை முகத்தோன். அனைத்து உயிர்களிலும் பிள்ளையார் இருக்கிறார் என்பதே இதன் தத்துவமாகும்.

மேலும், ஐங்கரனாகிய பிள்ளையாரின் பாசமேந்திய கை, படைத்தல் தொழிலையும், அங்குசமேந்திய கை, அழித்தலையும், மோதகமேந்திய கை,  அருளையும், தந்தமேந்திய கை, காத்தலையும், தும்பிக்கை, மறைத்தலையும் குறிக்கின்றன.

நீண்ட பெரிய செவிகள், பக்தர்களின் குறைகளைக் கேட்டு நிவர்த்திக்கின்றன. மூன்று கண்களாக,  சூரியன், சந்திரன், அக்னி உள்ளன. அண்டங்களை அடக்கி ஆள்வதை அவரின் பெரிய வயிறு குறிக்கிறது. பிள்ளையாரின் பாத சரணம் பக்தர்களைக்காத்து மகிழ்வினை அளிக்கிறது.

பிள்ளையாருக்கு தோப்புக்கரணம் மற்றும் தலையில் குட்டிக் கொள்வதற்கு கூறப்படும் சுவாரசியமான பின்னணிக் கதைகள் இதோ:-

தோப்புக்கரணம்:-

கஜமுகாசுரன் என்ற அரக்கன், தேவர்களை அடிமையாக்கி, பாடாக படுத்தினான். அவர்கள் அரக்கனுக்கு முன்பாக, தலையில் குட்டிக்கொண்டு, தோப்புக்கரணம் போட்டனர்.

பிள்ளையாரிடம் சென்று தேவர்கள் முறையிட, அரக்கனை பிள்ளையார் அழிக்க,  தேவர்கள் பய பக்தியோடு, அதே தோப்புக்கரணத்தை பிள்ளையாருக்கு போட்டனர்.

தனக்குத்தானே குட்டு:-

ஒருமுறை அகத்திய முனிவர் கண் மூடி தியானத்தில் இருக்கையில், அவரது கமண்டல நீரை,  காகம் வடிவில் பிள்ளையார் வந்து சரித்துவிட்டார்.  பிறகு ஒரு சிறுவன் வேடத்தில், முனிவரின் முன்பாக நிற்கையில்,  அவர் கோபத்துடன் சிறுவன் தலையில் குட்டப் போகையில் பிள்ளையாரென அறிந்து, தனக்குத் தானே தலையில் குட்டிகொண்டார்.

அறிவியல் பொருள்:-

தோப்புக்கரணம் போடுவதால், முழு உடம்பிற்கும் பயிற்சி கிடைக்கும்.  மூட்டு வலிகள் குணமாகும். சுவாசக் கோளாறுகள் குணமாகும். ஏனோ தானோ வென்று போடாமல், நிதானமாக போடுவது அவசியம். தலையின் இருபுறமும் லேசாக குட்டிக்கொள்வது, மூளை நரம்புகளை செயல்படவைக்க உதவும்.

இதையும் படியுங்கள்:
வினைகள் போக்கும் விநாயகருக்கு HAPPY BIRTHDAY! கொண்டாடுவோமா குட்டீஸ்?
Vinayagar chathurthi festival...

பூஜை முறை:-

களிமண் பிள்ளையார் விசேஷமானதால்,  அதை பூஜையறையில் வைத்து எருக்கம்பூ மாலை அணிவித்து, விளக்கேற்றி,  முறையாக பூஜை செய்ய வேண்டும். ஸ்லோகங்கள் கூறி, தேங்காய் உடைத்து வைத்து, நிவேதனப்பொருட்களைப் படைத்து, தூப தீபம் காட்டி மனதார வழிபட வேண்டும்.

வழிபடும் ஸ்லோகங்கள்:-

  ஷோடஸ நாமாவளி:-

     ஓம் ஸுமுகாய நம :

       ஓம் ஏகதந்தாய நம:

    ஓம் கபிலாயை நம :

       ஓம் கஜகர்ணிகாய நம :

    ஓம் லம்போதராய நம :

        ஓம் விகடாய நம :

     ஓம் விக்ன ராஜாய நம :

         ஓம் கணாதிபாய நம :

     ஓம் தூமகேதவே நம :

        ஓம் கணாத்யாட்சாய நம :

     ஓம் பால சந்திராய நம :

        ஓம் கஜானனாய நம :

     ஓம் வக்ர துண்டாய நம :

        ஓம் சூர்ப்ப கர்ணாய நம :

     ஓம் ஹேரம்பாய நம :

        ஓம் கந்தபூர்வஜாய நம :

ஓம் ஸ்ரீ மகா கணபதியை   

                     நம: ஓம்!"       

 விநாயகர் துதி :-

"மூஷிக வாகன மோதக ஹஸ்த

சாமர கர்ண விலிம்பித சூத்ர

வாமன ரூப மகேஸ்வர புத்ர

விக்ன விநாயக பாத நமஸ்தே!"

கணபதி பப்பா மோர்யா!

மங்கள மூர்த்தி மோர்யா!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com