ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் விஷு பண்டிகை!

ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் விஷு  பண்டிகை!

ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் இன்று காலை 4 மணிக்கு விஷு கனி தரிசனம் நடைபெற்றது அதைத் தொடர்ந்து சகஸ்ர கலசாபிஷேகம் நடைபெற்றது . இந்த விழா ஏற்பாடுகளை கோயில் கமிட்டி நிர்வாகிகள் மிக சிறப்பாக செய்துள்ளனர். கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை அருகே உள்ள மீனச்சல் ஸ்ரீ கிருஷ்ணசுவாமி கோயிலில் சகஸ்ர கலசாபிஷேகம் நேற்று தொடங்கியது.

மலையாளிகள் விஷூவை புத்தாண்டு கொண்டாட்டமாக கொண்டாடுகிறார்கள். பொதுவாக ஏப்ரல் மாதத்தில் விஷு பண்டிகை வரும். இந்த பண்டிகை கொண்டாடப்படும் மாதத்தின் தொடக்கம் மலையாள நாட்காட்டியில் மேடம் என்று அழைக்கப்படுகிறது. 2022 விஷு பண்டிகை தேதி ஏப்ரல் 15 ஆம் தேதி. ஒவ்வொரு ஆண்டும் விஷூவின் அதிகாரப்பூர்வ தேதி இந்திய தேசிய நாட்காட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது.

சமஸ்கிருத மொழியில் 'விசு' என்றால் 'சமம்' என்று பொருள், இது மலையாளிகளின் பண்டிகை மட்டுமல்ல. இவ்விழா இந்தியா முழுவதும் வெவ்வேறு பெயர்களில் கொண்டாடப்படுகிறது. அஸ்ஸாமில் விஷு பண்டிகை பிஹு என்றும், பஞ்சாபில் பைசாகி என்றும் கொண்டாடப்படுகிறது.

கேரளாவில் உள்ள பழங்குடி மக்கள் விஷூவை பல வண்ணமயமான சடங்குகளுடன் கொண்டாடுகிறார்கள். இந்த பண்டிகை செழிப்பைக் குறிக்கிறது மற்றும் அறுவடையின் திருவிழாவாகும். விஷூ நாளில் சூரியன் மேஷ ராசியில் நுழைவதால் இரவும் பகலும் சம அளவு இருக்கும்

ஸ்ரீ கிருஷ்ணசுவாமி திருக்கோயிலில் விஷு பண்டிகையை முன்னிட்டு சகஸ்ர கலசாபிஷேகம் மூன்று நாட்கள் தொடர்ந்தது பல்வேறு சிறப்பு பூஜைகள் உடன் நடைபெற்று வருகிறது.

கேரளாவில் ஆண்டுதோறும் மலையாளப் புத்தாண்டு தினம், விஷு பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதன்படி, கேரளாவில் விஷு பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்படவுள்ளது.

விழாவின் முதல் நாள் மாலை வாஸ்து ஹோமம், வாஸ்து கலசபூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தொடர்நது சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com