தசாங்க பொடியின் பயன்கள் என்னென்ன? தெரிஞ்சிக்கலாம் வாங்க!

Dasangam Powder
Dasangam PowderImage Credits: Sindinga9

ப்போதெல்லாம் தூபதீபம் காட்ட சாம்பிராணி இருப்பது போல பழங்காலம் முதலாகவே தசாங்கத்தை இறைவனுக்கு கோவில்களில் பயன்படுத்தி வந்தார்கள். இந்த தசாங்கம் பத்து வகையான நறுமண பொருட்களை கொண்டும், திருஷ்டியை எடுக்கக்கூடிய பொருள்களை கொண்டும், மூலிகைகளை கொண்டும் செய்யப்பட்டது. 'தஸ்' என்றால் ஹிந்தியில் பத்து என்று பொருள். பத்து விதமான பொருட்களை கொண்டு செய்ததால் இதற்கு தசாங்கம் என்ற பெயர் வந்தது.

ஜவ்வாது, புனுகு, பால் சாம்பிராணி, மூலிகைகள் ஆகியவற்றை சேர்த்து இந்த தசாங்க பொடியை தயாரிக்கிறார்கள். இறைவனை வீட்டில் ஆகர்ஷணம் செய்ய வேண்டும் என்றால் இந்த தசாங்கத்தை வீட்டில் பயன்படுத்துவது நல்லதாகும். இந்த தசாங்கத்தை வீட்டில் பயன்படுத்தினால், வீடு முழுவதும் வாசனை பெருகும். இதை வீட்டின் மூலை முடுக்கெல்லாம் காட்டுவதால் நெகட்டிவ் எனர்ஜி நீங்கி பாசிட்டிவ் எனர்ஜி கிடைக்கும். கோவிலில் இருப்பது போன்ற உணர்வு வீட்டில் கிடைக்கும்.

குழந்தைகளுக்கு தசாங்க பொடியால் திருஷ்டி எடுத்தால் நன்றாக திருஷ்டி கழியும். இந்த தசாங்கம் போன்ற நறுமண பொருட்களை வீட்டில் வைப்பதனால் பாசிட்டிவ் சக்தி உருவாகும். சாம்பிராணி, தசாங்கம் போன்றவற்றை நாம் சுவாசித்தாலே நமக்கு நல்ல புத்துணர்ச்சியை தரும். இதை வீட்டில் ஏற்றி வைப்பதால் நரம்பு மண்டலத்தில் இருக்கும் பிரச்னை விலகி சுறுசுறுப்பாக செயல்படுவோம்.

இதை வீடு முழுவதும் காட்டுவதால் தரித்திரிய நிலை நீங்கி செல்வ செழிப்பு பெருகும். குழந்தைகளை குளிப்பாட்டி விட்டு தசாங்க பொடியை காட்டுவார்கள். நாட்டு மருந்து கடைகளில் சுலபமாக தசாங்க பொடி என்று கேட்டால் கிடைக்கும்.

தசாங்க பொடி கடைகளில் வாங்கும் பொழுது ஒரு மோல்டுடன் வரும். முதலில் பொடியை மோல்டில் நிரப்பி பின்பு அகலில் ஏற்றவதென்றால் அதில் வைத்து தட்டினால் மோல்ட் போலவே உருவத்தில் வந்துவிடும். அதை ஊதுபத்தி போல பற்ற வைத்தால் தானாக வீடு முழுக்க நறுமணம் பரவ ஆரமித்துவிடும். தசாங்கத்தில் உள்ள பொருட்கள் வெட்டிவேர், லவங்கம், வெள்ளை குங்கிலியம், ஜாதிக்காய், மட்டிப்பால், சந்தனதூள், நாட்டுச்சக்கரை, கீச்சிலி கிழங்கு,சாம்பிராணி, திருவட்டபச்சை ஆகியனவாகும்.

இதையும் படியுங்கள்:
வாராகி அம்மன் வழிபாடு எப்படி செய்ய வேண்டும்...தெரிஞ்சிக்கலாம் வாங்க!
Dasangam Powder

இந்த தசாங்கமானது உடலில் உள்ள பல வியாதிகளை போக்கக்கூடியதாகும். சோம்பேறித்தனம் நீங்கி சுறுசுறுப்பு வரும், வீட்டில் கணவன் மனைவி பிரச்னை நீங்கும், தொழிலில் உள்ள தடங்கல்கள் நீங்கும். தசாங்கத்தை தினமும் காலை, மாலை வீடுகளில் போடுவது மிகப் பெரிய நன்மையை தரும். வீட்டில் உள்ள பெரியவர்கள் மற்றும் சிறியவர்கள் என்று யாராக இருந்தாலும் கிழக்கு பார்த்து அமர வைத்து தசாங்கத்தை மூன்று முறை சுற்றி திருஷ்டியை கழிக்க வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com