அட்சய திருதியை அன்று செய்ய கூடியது என்ன? செய்யக்கூடாதது என்னவென்று தெரியுமா?

அட்சய திருதியை
அட்சய திருதியை

ட்சய திருதியை நாளில் தங்கம் வாங்குவதால் வாழ்வில் செல்வம் சேர்ந்து கொண்டே இருக்கும்> அதனால் தங்கம் போன்ற ஆபரணங்கள் வாங்குவது சிறப்பாகும்.

இந்த நாளில் அதிர்ஷ்டத்தை தரக்கூடிய அற்புதமான நாள் என்பதால் புதிய தொழில் வியாபாரம் ஆகியவற்றை துவங்கலாம்.

அட்சய திருதியை அன்று ரியல் எஸ்டேட் வியாபாரம் முன்னேற்றத்தில் புதிய முதலீடு செய்யலாம். இது அதிர்ஷ்டத்தை நமக்கு தேடித் தரும்.

திருமணம், புதிய தொழில் தொடங்குவது, புதிய வாகனங்கள் மற்றும் சொத்துக்கள் வாங்குவது முதலீடுகள் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
லெமன் கிராஸின் 11 ஆரோக்கிய நன்மைகள்!
அட்சய திருதியை

யாகங்கள், பூஜைகள், தானம் தர்மம் செய்தல், புனித நதிகளில் நீராடுதல் பித்ரு தர்ப்பணம் செய்வது ஆகியவற்றை செய்யலாம்.

வீட்டுக்கு தேவையான மங்களகரமான பொருட்கள் உபயோகப் பொருட்கள் வாங்கலாம்.

உப்பு கட்டாயம் வாங்க வேண்டும். உப்பில் மகாலட்சுமி குடியிருக்கிறாள்.

வெள்ளியால் ஆன பொருட்கள் வாங்கலாம்.

ஆடைகள் உணவுகள் போன்றவற்றை தானம் செய்யலாம்.

வசதி உள்ளவர்கள் பசு மாட்டிற்கு உணவு தானம் வழங்கலாம்.

மகாலட்சுமிக்கு இனிப்பு மிகவும் பிடித்தமான உணவு. அதனால் இனிப்புகளை செய்து தானமாக வழங்கலாம்.

மகாலட்சுமியையும் மகாவிஷ்ணுவையும் வழிபட வேண்டும்.

அட்சய திருதியை...
அட்சய திருதியை...

சாத்வீக உணவுகளை நெய்வேத்தியமாக படைத்து பிரசாதத்தை மற்றவர்களிடம் கொடுத்து நாமும் சாப்பிட வேண்டும்.

அட்சய திருதியை அன்று தாம்பூலம் தானம் செய்தால் அரசு அனுகூலம் கிடைக்கும்.

ஆடை தானம் செய்தால் நோய் தீரும்.

வாசனை திரவியங்கள் தானம் செய்தால் பாவங்கள் அகலும்.

தயிர் தானம் செய்தால் தீர்க்காயுள் உண்டாகும்.

தயிர் சாதமும் ஊறுகாயும் சேர்த்து தானம் செய்தல் ஏழேழு ஜென்மத்திற்கும் உண்டான புண்ணியம் வந்து சேரும்.

விசிறி குடை போன்றவற்றையும் தானம் செய்யலாம்.

செய்யக்கூடாதவை;

அசைவ உணவுகள் மது போன்ற போதை பொருட்களை தவிர்க்க வேண்டும்.

வெங்காயம் பூண்டு ஆகியவற்றை தவிர்க்க வேண்டும்.

அட்சய திருதியை நாளில் விரதம் இருந்து வழிபடலாம். ஆனால் விரதத்தை நிறைவு செய்வது   துரதிஷ்டம் ஏற்படுத்தும்.

இந்த நாளில் யாருடனும் சண்டையிடுவதோ கோபப் படுவதோ அமங்கலமான சொற்களை பேசுவதோ கூடாது.

வீட்டை இருள் அடைய விடக்கூடாது. வீட்டில் எந்த பகுதியாவது இருட்டாக இருந்தால் அங்கு விளக்கேற்றி வைக்க வேண்டும்.

அட்சய திருதியை அன்று மகாலட்சுமியையும் விநாயகரையும் தனித்தனியாக பூஜை செய்யாமல் இந்த இரு தெய்வங்களையும் ஒன்றாக வைத்து வழிபட்டால் மட்டுமே செல்வம் வளம் பெருகும்.

அட்சய திருதியை ...
அட்சய திருதியை ...

ஏதாவது வாங்குவதற்கு என்று வெளியில் சென்று விட்டு வெறுங்கையுடன் வீட்டிற்கு திரும்பக் கூடாது. எதையாவது அது மஞ்சளாக இருந்தால் கூட சரிதான் மஞ்சள் குங்குமத்தை கூட வாங்கிக் கொண்டு வந்தாலும் அன்று அது புண்ணியம்தான்.

அட்சய திருதியை அன்று கடன் வாங்கவோ கடனை திருப்பிக் கொடுக்கவும் கூடாது.

அட்சய திருதியை அன்று யார் வந்து யாசகம் கேட்டாலும் காசு அல்லது உணவு தவறியும் கூட இல்லை என்று சொல்லிவிடக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com