பெண்களின் சபரிமலை!

பெருநாடு சாஸ்தா கோவில்
பெருநாடு சாஸ்தா கோவில்
Published on

கேரள மாநிலம் பத்தினம் திட்டம் மாவட்டத்தில் இருக்கிறது பெருநாடு என்ற பகுதி. இந்த இடத்தில் அமைந்திருக்கும் காக்காட்டு கோயில் தர்மசாஸ்தா கோவில் பெண்களின் சபரிமலை என்று பெருமையாக சொல்லப்படுகிறது.

பெருநாடு சாஸ்தா கோவில் பந்தனம் திட்டம் மாவட்டத்தில் பந்தளம் திட்டாவிலிருந்து சபரிமலை செல்லும் வழியில் உள்ளது. இக்கோவில் பந்தள மகாராஜா ராஜசேகர் மன்னரால் கட்டப்பட்டது. சபரிமலையில் மணிகண்டனுக்கு மன்னர் கோவில் கட்ட பெருநாட்டில் இருந்துதான் பணிகளை மேற்கொண்டதாக கூறுகின்றனர்.

பெருநாடு சாஸ்தா கோவிலில் இருந்து சபரிமலை கோவில் கட்டிடங்களுக்குத் தேவையான பொருட்கள், பணியாளர்களை அனுப்புதல் போன்ற அனைத்து பணிகளையும் மன்னர் மேற்பார்வை செய்துள்ளார். பெருநாடு சாஸ்தாவும், சபரிமலை ஐயப்பனும் ஒன்றே என இங்குள்ளவர்கள்  கூறுகின்றனர்.

சபரிமலைக்கு பெண்கள் பத்து வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்கள் செல்ல முடியாது. இந்த வயதுள்ள பெண்கள் பெருநாடு சாஸ்தாவின் தரிசனம் செய்தால் சபரிமலை ஐயனை தரிசித்ததாகவே நினைக்கின்றனர். சபரிமலை ஐயப்பனுக்கு எண்ணில் அடங்கா விலை மதிப்பிட முடியாத நகைகளை சபரிமலைக்கு கொண்டு சென்று மகனுக்கு அணிவித்து மன்னன் அழகுபார்த்தான். இந்தக் காட்சியை பெண்களால் பார்க்க முடியவில்லை என்ற ஏக்கம் இருந்தது. இதனால் சபரிமலையில் மகரஜோதி உற்சவம் முடிந்து வரும் வழியில் இந்த ஆபரணங்கள் பெருநாடு வழியாகவே நடை பயணமாகவே பந்தளத்திற்கு மீண்டும் கொண்டு வரப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இனி வாட்ஸ்அப்பில் அன்லிமிடெட் பேக்கப் கிடையாது!
பெருநாடு சாஸ்தா கோவில்

சபரிமலை சாஸ்தாவிற்கு அணிவிப்பதற்காக ஆரணமுளா  பார்த்தசாரதி கோவிலில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்தால் ஆடை மற்றும் திருவாபரணங்கள் மூன்றாம் நாளில் பெருநாடு சாஸ்தா கோவிலில் வைக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன. அதன் பின்னர் சபரிமலைக்கு கொண்டு செல்லப்பட்டு மண்டல பூஜை நிறைவு நாளில் தங்கத்தாலான ஆடை மற்றும் திருவாபரணங்கள்  சபரிமலையில் இருக்கும் சாஸ்தா விற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடு செய்யப்படுகிறது.

அதன் பின்னர் மகரஜோதி நிறைவுக்கு பின்னர் அந்த தங்கத்தால் ஆன ஆடை மற்றும் திருவாபரணங்கள் பெருநாடு கொண்டுவரப்பட்டு, அங்கிருக்கும் சாஸ்தாவிற்கு அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் செய்யப்படுகின்றன இவ்விழாவில் மரபுரிமையர் மற்றும் பெண்கள் பலரும் பங்கேற்று சாஸ்தாவை வழிபட்டு செல்கின்றனர் . இக்கோவிலை பெண்களின் சபரிமலைஎன்று பெருமையாக சொல்கின்றனர்.

பெருநாடு சாஸ்தா கோவில்
பெருநாடு சாஸ்தா கோவில்

அமைவிடம் கேரள மாநிலம் பந்தனம் திட்டம் மாவட்டம் ராணி வட்டத்தில் அமைந்திருக்கும் பெருங்காடு சாஸ்தா கோவில் பந்தனம் திட்டாவிலிருந்து 19 கிலோமீட்டர் தொலைவிலும் ராணியில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவிலும் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com