அமாவாசையன்று பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை!

அமாவாசையன்று பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல தடை!
கல்கி

தமது எழுத்தின் மூலம் சமூக மாற்றத்தை ஏற்படுத்த விரும்பும் எழுத்தாளர். சுவாரஸ்யமான நடையில், பயனுள்ள தகவல்களையும், புதிய சிந்தனைகளையும் தமது பல்வேறு படைப்புகள் வாயிலாக கல்கி ஆண்லைன் வாசகர்களுக்கு வழங்குகிறார்.

Updated on

விருதுநகர் மாவட்டம் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பக்தர்கள் பௌர்ணமி ,அமாவாசை தினங்களில் சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். தற்போது கொரோனா காரணமாக சதுரகிரியில் பக்தர்கள் தரிசனத்திற்கு தடை விதிக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக இன்று முதல் வருகின்ற 6-ம் தேதி வரை பிரதோஷம் மற்றும் அமாவாசை தினங்களில் முன்னிட்டு பக்தர்கள் அதிக அளவில் கூடுவார்கள் என்பதால் இன்று முதல் 6-ஆம் தேதி வரை பக்தர்கள் தரிசனத்துக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வழக்கமான பூஜைகள் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் யாரும் தாணிப்பாறைமலை அடிவாரம் மற்றும் சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு வர வேண்டாம் என்று மாவட்ட ஆட்சித்தலைவர் மேகநாதரெட்டி தெரிவித்துள்ளார்.

logo
Kalki Online
kalkionline.com