திருச்சூர் பூரம் திருவிழா; கோவில் யானைகள் திடீர் சண்டை!

திருச்சூர் பூரம் திருவிழா; கோவில் யானைகள் திடீர் சண்டை!
Published on

-காயத்ரி.

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்திலுள்ள சாஸ்தா கோவிலில் பூரம் திருவிழா மிகவும் பிரசித்தம். அக்கோவிலை சுற்றி இருக்கக்கூடிய கோவில்களிலிருந்து அலங்கரிக்கப்பட்ட யானைகள் ஒன்று திரண்டு ஊர்வலம வரச்செய்து சாஸ்தாவை வணங்குவார்கள்.

இந்த ஆராட்டுபுழா பூரம்  திருவிழாவில்  நேற்று ஊர்வலம் செல்வதற்காக மூன்று யானைகள் அலங்கரிக்கப்பட்டு நிறுத்தப்பட்டிருந்தது இந்த நிலையில்  திடீரென்று  ஒரு யானையை மற்றொரு யானை தனது தந்தத்தால் தாக்க,  மிரண்டு போன மூன்றாவது யானை பிளிறியது. இதைக் கண்டு அங்கிருந்த மக்கள் மிரன்டு ஓடத் தொடங்கினர். இதில் அருகிலிருந்த பள்ளத்தில் விழுந்து சிலருக்கு காயம் ஏற்பட்டது.

யானைகள் மிரண்டு ஒன்றுக்கொன்று சண்டையிடுவதை பார்த்த பாகன்கள் யானைகளை உடனடியாக கட்டுக்குள் கொண்டுவந்தனர் இருந்தபோதும் மூன்று யானைகளையும்  உடனடியாக கால்நடை மருத்துவ குழுவினர் பரிசோதனை செய்து வருகிறார்கள் ஆராட்டுபுழா பூரம் திருவிழாவில் இப்படி மூன்று யானைகளுக்கும் ஏற்பட்ட சண்டை காரணமாக அங்கு பரபரப்பான சூழ்நிலை நிலவியது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com