நினைவாற்றலை அதிகப்படுத்தும் 6 விளையாட்டுகள். நீங்களும் விளையாடலாமே குட்டீஸ்!

child improve memory
child improve memoryImage credit - pixabay

ந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகள் சுவாரஸ்யமாக இருப்பதோடு மட்டுமில்லாமல், சிறந்த பொழுதுபோக்காகவும் உள்ளன. அதோடு, இவை அறிவுத் திறனை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன.  அந்தாக்ஷரி, கோலி, பல்லாங்குழி போன்ற பாரம்பரிய விளையாட்டுகள் மூளை, மன சுறுசுறுப்பு மற்றும் கவனிக்கும் திறனை மேம்படுத்த உதவுகின்றன. அறிவாற்றலையும் மேம்படுத்துகின்றன. 6 வகையான இந்திய பாரம்பரிய மற்றும் நவீன விளையாட்டுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. அந்தாக்ஷரி:

அந்தாக்ஷரி
அந்தாக்ஷரி

மிகவும் சுவாரஸ்யமான இந்திய பாரம்பரிய விளையாட்டுக்களில் ஒன்று. இது ஒரு குழு விளையாட்டாகும்.  ஒருவர் முதலில் ஒரு பாடலை பாட ஆரம்பிக்க வேண்டும். அவர் பாடி முடித்த பாடலின் கடைசி எழுத்து அல்லது கடைசி வார்த்தையில் தொடங்கும் பாடலை அடுத்த நபர் குறிப்பிட்ட நொடிகளிலோ அல்லது நிமிடங்களிலோ பாடத் தொடங்க வேண்டும். இதுதான் அந்தாக்ஷரியின் விதிமுறையாகும்.  இது நமது நினைவாற்றலை அதிகப்படுத்துவதற்கு, சிறந்த பயிற்சி தரும் விளையாட்டாக உள்ளது. மேலும், இந்த விளையாட்டு மனதை சுறுசுறுப்பாகவும், கூர்மையாகவும், நிலைத்தன்மையுடனும் வைத்திருக்க உதவுகிறது.

2. வேத கணிதப் பயிற்சி:

வேத கணிதப் பயிற்சி
வேத கணிதப் பயிற்சி

பெரும்பாலும் இது இளைஞர் மற்றும் முதியவருக்கான அறிவாற்றலை அதிகரிக்க உதவும் ஒரு பயிற்சியாகும். இந்தப் பயிற்சியில் சிக்கலான கணக்கீடுகளுக்கு சூத்திரங்களைப் பயன்படுத்தி மனதுக்குள் கணக்கிட்டு  தீர்வு காண்பார்கள்.  நமது சிந்தனை, படைப்பு மற்றும் அறிவாற்றல் திறனை மேம்படுத்துவதில் இந்த பயிற்சி முக்கிய பங்கு வகிக்கிறது.

3. பல்லாங்குழி:

பல்லாங்குழி
பல்லாங்குழி

ல்லாங்குழி என்பது இந்தியாவின் பாரம்பரிய விளையாட்டுகளில் ஒன்று. இதற்கு 'பள்ளன்' என்ற பெயரும் உண்டு. இந்த விளையாட்டு மனதிற்கும், உடல் உறுப்புகளான கண் மற்றும் கைகளுக்கும் உடற்பயிற்சி தருகிறது. இதன் மூலம் சிந்தனை, அறிவாற்றல், ஞாபத்திறன் மற்றும் கண், கைகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டினை ஊக்கப்படுத்த முடியும். இது பெரும்பாலும் பெண்கள் விளையாடும் விளையாட்டாக உள்ளது.

இதையும் படியுங்கள்:
நன்றை செய்க... அதை இன்றே செய்க!
child improve memory

4. சதுரங்கம் (Chess):

சதுரங்கம்
சதுரங்கம்

துரங்கம், இந்தியாவில் மிகப் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்று. சதுரங்க கட்டங்களில் உள்ள காய்களை நினைவில் வைத்துக் கொண்டு, எதிர்கால காய்களின் நகருதலை தீர்மானித்து, மனதுக்குள் காட்சிப்படுத்தி (Visualize) விளையாட வேண்டும். அறிவாற்றல், நினைவாற்றல் மற்றும் காட்சிப்படுத்துதல் போன்ற திறன்களை அதிகப்படுத்தும், சிறந்த பயிற்சியாக இந்த விளையாட்டு உள்ளது.

5. கபடி:

கபடி:
கபடி:

படி, இந்தியாவின் பாரம்பரியமான, பழமையான குழு விளையாட்டுகளில் ஒன்று. உடல் மற்றும் மனம் செயல்படும் திறனை அதிகப்படுத்த உதவுகிறது. விளையாட்டின் வேகம், எதிரிகளின் மனநிலை மற்றும் அவர்களின் நகர்வுகளைத் தீர்மானித்து, விளையாட வேண்டிய விளையாட்டு.

6. கோலி:

கோலி:
கோலி:

கோலி விளையாட்டு, பல்லாங்குழி போல மனம் மற்றும் உடல் உறுப்புகளான கண், கைகளுக்கு பயிற்சி தரும் விளையாட்டு. வீரர்கள் 'கோலி' என்றழைக்கப்படும் 'பளிங்கு குண்டுகளை' குறிபார்த்து அடிக்க வேண்டும். இந்த விளையாட்டு மூளை, மனக்கூர்மை மற்றும் அறிவாற்றல் திறன்களை ஊக்குவிக்க உதவுகிறது. இது பெரும்பாலும் ஆண்கள் விளையாடும் விளையாட்டாக உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com