6 வகை பருப்புகளும், அதில் அடங்கியுள்ள சத்துக்களும்!

6 வகை பருப்பு...
6 வகை பருப்பு...
Published on
gokulam strip
gokulam strip

1. கொண்டைக்கடலை

இவை கார்பன்சோ பீன்ஸ் என்றும் அழைக்கப் படுகின்றன. இவற்றில் வளமான புரோட்டீன் மற்றும் நார்ச்சத்துகள், கால்சியம், இரும்பு தாதுக்கள் அடங்கி உள்ளன. இவற்றைக்கொண்டு சாலடுகள் சூப், குழம்பு வகைகள் செய்யலாம். ஊற வைத்த கொண்டைக்கடலை சுண்டல் சிறிதளவு சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும். இது ரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது. மேலும், இதய ஆரோக்கியம் போன்ற பல்வேறு நன்மைகளைத் தருகிறது.

2. கிட்னி பீன்ஸ்

இவை சிறுநீரக வடிவிலான லேசான, பபளபளப்பான தோல் மற்றும் அமைப்புடன் பல்வேறு வண்ணங்களில் கிடைக்கும். இவை சமைக்கும்போது கிரீமியாகவும், மென்மையாகவும் மாறும். இவற்றை உணவில் சிறிதளவு சேர்த்தாலும் போதும். புரதம், நார்ச்சத்து, இரும்புச்சத்து, மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் நிறைந்தவை. இதை நன்றாக வேகவைத்து உண்ண வேண்டும். இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும். நிலையான ஆற்றலை வழங்கும். மற்றும் செரிமானத்திற்கு உதவும்.

3. பச்சை பீன்ஸ்

இதை பாசிபயறு, சிறுபயறு என்றும் சொல்வார்கள். இவை சிறிய வட்டமான பச்சை நிறத்தில் இருக்கும். இவற்றில் புரதம், நார்ச்சத்து, வைட்ட மின்கள் ஏ, பி, சி, மற்றும் ஈ மேலும் இரும்பு, பொட்டாசியம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. ஊற வைத்து சிறிதளவு பச்சையாக சாப்பிட மிகவும் சத்தானது. இவை செரிமானத்திற்கு உதவும். இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். மற்றும் எடை மேலாண்மைக்கு உதவுகிறது.

இவை இந்தியா, சீனா, தென் கிழக்கு ஆசியாவில் அதிக அளவில் வளரும். குறைந்த நீர் தேவை. மற்றும் ஹைட்ரஜனை நிலைப்படுத்துதல் மூலம் மண்வளத்தை அதிகரிக்கிறது.

4. கடற்படை பீன்ஸ் – நேவி பீன்ஸ்

இவை ஹரிகோட் மற்றும் ஓவல் வடிவ வெள்ளை பீன்ஸ் என்றும் அறியப்படுகின்றன. இவை அமெரிக்க கடற்படையின் பெயரை பெற்றன. இவற்றில் புரதம், நார்ச்சத்து மற்றும் மாங்கனீசு, பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன.அவற்றின் கிரீமிஅமைப்பு, பல உணவுகளில் சேர்த்து ப்யூரி செய்வதற்கும் ஏற்றதாக அமைகிறது. இவை குறைந்த கொழுப்பு சத்து மற்றும் அதிக நார்ச்சத்துகொண்டு நீடித்த ஆற்றலை வழங்குகின்றன.

இதையும் படியுங்கள்:
பலாப்பழம் வைத்து சுவையான இரண்டு வகை ஸ்வீட்!
6 வகை பருப்பு...

5. பச்சைப் பட்டாணி

சிறிய வட்டமான மற்றும் துடிப்பான பச்சை நிற கோளங்கள் ஒரு காய்க்குள் மூடப்பட்டிருக்கும். இவற்றில் வைட்டமின் கே,சி, ஃபோலேட்  மற்றும் இரும்பு, துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்துள்ளன. இவற்றில் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் குடலை ஆரோக்கியமாக பராமரிக்க உதவுகிறது. இவை இனிப்பு மற்றும் சிறிது மாவுச்சத்து நிறைந்ததாக இருக்கும். மேலும் இவற்றை வேக வைத்து சாப்பிடலாம். அல்லது, குழம்புகளிலோ சேர்த்துகொள்ளலாம். அதிகமாக ஏராளமானவர்கள் விரும்பி பயன்படுத்துவார்கள்.

6. ஃபாவா பீன்ஸ் – தட்டை மொச்சை

இவை பெரிய தட்டையான பச்சை நிற காய்களாகும். புரதம், நார்ச்சத்து, இரும்பு, மற்றும் ஃபோலேட் போன்ற பிற அத்தியாவசிய ஊட்டச்சத் துக்கள் நிறைந்துள்ளன. இவை பல்வேறு உணவு வகைகளில் சேர்க்கப்படுகின்றன. வேகவைத்தல், ஆவியில் வேகவைத்தல், சூப்களில் சேர்ப்பது போன்ற வழிகளில் சமைக்கலாம். இவை இதய ஆரோக்கியத்திற்கும், செரிமானத்திற்கும் பங்களிக்கின்றன.

இந்த பருப்பு வகைகள் பற்றியும் அவற்றின் நற்கணங்கள் பற்றியும் தெரிந்துகொண்டீர்களா குட்டீஸ்? இனி, தினம் தினம் ஒரு பருப்பு வகையை உங்கள் உணவில் சேர்த்துக்கொள்ளும் உங்கள் பெற்றோருக்கு நீங்கள் பரிந்துரைக்கலாமே!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com