ஒவ்வொரு நாடும் அதன் பாரம்பரியத்தையும், அடையாளத்தையும் பிரதிபலிக்கும் வண்ணம் விலங்குகள் மற்றும் பறவைகளை தேசிய சின்னமாகக் கொண்டுள்ளன. அவை அந்த நாட்டின் கலாச்சார பெருமையையும், இயற்கை அழகையும் குறிக்கின்றன.
வங்காள புலி இந்தியாவின் தேசிய விலங்காகும். இது கருணை, அழகு மற்றும் சக்தியை குறிக்கிறது. இது இந்தியக் காடுகளிலும், தேசிய பூங்காக்களிலும், வனவிலங்கு காப்பகங்களிலும் உள்ளன. 'ப்ராஜெக்ட் டைகர்' போன்ற இந்தியாவின் பாதுகாப்பு திட்டங்களில் புலி குறிப்பிடத்தக்க பங்கை வகிக்கிறது.
ஆஸ்திரேலியாவின் தேசிய விலங்கு கங்காரு. அழகான தோற்றமும், பெரிய கண்களையும் கொண்ட இந்த உயிரினம் அதன் வலுவான கால்கள் மற்றும் சக்தி வாய்ந்த தாவல்கள் போன்றவற்றுக்கு பெயர் பெற்றது. இதனுடைய வயிற்றில் இருக்கும் பை தனித்துவம் வாய்ந்தது. தன்னுடைய குட்டியை பையில் வைத்திருக்கும். ஆஸ்திரேலியாவின் வறண்ட சூழல்களுக்கு ஏற்ற விதமாக இதனுடைய கால்கள் அமைந்துள்ளன விமான நிறுவன லோகோக்கள் உட்பட தேசிய சின்னங்களில் கங்காரு பயன்படுத்தப்படுகிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் தேசிய விலங்கு சிங்கம். இது துணிச்சலையும், வலிமையையும் குறிக்கிறது. பிரிட்டிஷ் அரச குடும்பத்துடனான நீண்ட கால தொடர்பைப் பிரதிபலிக்கும் வகையில் அரசுச் சின்னத்தில் முக்கிய இடம் பெற்றுள்ளது.
தெனாப்பிரிக்காவின் தேசிய விலங்கு ஸ்பிரிங் போக் எனப்படும் மானாகும். இது வேகமான மற்றும் சுறுசுறுப்பான அழகான மான் இனம் ஆகும். இந்த அழகான உயிரினம் அந்த நாட்டின் திறந்த வெளி சமவெளிகளிலும் வறண்ட பகுதிகளிலும் வாழ்கிறது. தேசிய ரக்பி அணியின் அன்பான சின்னமாக விளங்குகிறது.
அமெரிக்காவின் தேசிய பாலூட்டி காட்டெருமையாகும். இது வலிமை மற்றும் மீள் தன்மையைக் குறிக்கிறது. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அழியும் நிலையில் இருந்த காட்டெருமைகள் இப்போது அந்த நாட்டின் பாதுகாப்பு முயற்சிகளின் காரணமாக அமெரிக்க நிலப்பரப்பின் நீடித்த சின்னமாக உள்ளது. இன்று தேசிய பூங்காவின் பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுதந்திரமாக சுற்றித் திரிவதை காணலாம்.
இது சீனாவின் தேசிய விலங்கு மற்றும் வனவிலங்கு பாதுகாப்பின் உலகளாவிய சின்னமாக விளங்குகிறது. இதன் உருவம் சீனக் கலாச்சாரம் மற்றும் சர்வதேச பாதுகாப்பு முயற்சிகளுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் குறிக்கிறது. அழகான தோற்றமுடைய இந்த உயிரினம் மலை மூங்கில் காடுகளை பூர்வீகமாகக் கொண்டது. அழிந்து வரும் இந்த விலங்குகளை பாதுகாக்கவும் இனப்பெருக்கம் செய்யவும் சீன அரசு எல்லா முயற்சிகளையும் எடுத்து வருகிறது.
இது ஒரு பறக்க முடியாத பறவையாகும். நியூசிலாந்தின் தேசிய சின்னமாக விளங்குகிறது. பேச்சு வழக்கில் நியூசிலாந்து மக்கள் 'கிவி' என்று அழைக்கப்படுகிறார்கள். இது பறவையின் ஆழமான தேசிய முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு காட்டுகிறது.
நீரெலி கனடாவின் தேசிய விலங்கு. அதன் பொறியியல் திறன்களுக்காக அறியப்படுகிறது. கனடாவின் ஆரம்ப கால பொருளாதாரத்தில் ஃபர் வர்த்தகத்தின் மூலம் இந்த உயிரினம் முக்கியப் பங்கு வகித்தது. 17 முதல் 19 ஆம் நூற்றாண்டுகளில், ஐரோப்பாவில் நீரெலியின் தோல் பகுதிகளுக்கு, குறிப்பாக ஃபீல்ட் தொப்பிகளை தயாரிப்பதற்கு, பெரும் தேவை இருந்தது. இந்த தொப்பிகள் ஒரு முக்கிய ஃபேஷன் மற்றும் அந்தஸ்தின் அடையாளமாகவும் இருந்தன. மேலும் இந்த நீரெலி கனடா நாணயங்களிலும், அஞ்சல் தலைகளிலும் இடம் பெற்றுள்ளது.