8 x 8 சதுரங்க விளையாட்டு! விளையாடுவோமா குட்டீஸ்?

Chess game
Chess game
Published on

இந்த விளையாட்டு அரசர்களின் விளையாட்டு. இதை செங்களம் என்று கூறுவார்கள். இது ஒரு பலகை விளையாட்டு ஆகும். இந்த விளையாட்டுக்கு ஆனைக்குப்பு என்ற பெயரும் உண்டு. இருவர் விளையாடும் இந்த விளையாட்டில், ஒரு ஆட்டக்காரருக்கு 16 வீதம் இரு பக்கமும் சேர்ந்து 32 காய்கள் பயன்படுத்தப்படும். இதில் உள்ள 16 காய்களும் அதற்கென்று தனி தனி சிறப்பு அம்சங்களுடன் அமைத்திருக்கும். பலகை, 8 வரிசைகளிலும், 8 நிரல்களிலும் (8 x 8) அமைந்த மொத்தமாக 64 கட்டங்களைக் கொண்ட சதுர வடிவமானது. பொதுவாகக் கறுப்பு, வெள்ளை நிறங்களில் மாறி மாறி அமைந்திருக்கும்.

சதுரங்க யானை:

இந்த யானை காயானது நான்கு பக்கமும் செல்ல கூடியது. ஒரு கட்டம் இல்லாமல் நீண்ட தூரம் போகலாம் ஆனால் எந்த திசையை நோக்கி செல்கிறதோ அங்கு நேராக மட்டுமே செல்லும்.

சதுரங்க குதிரை:

இந்த குதிரை காயாக்கு Lல் நகரக்கூடிய விதிமுறை உள்ளது. முதலில் நேராக இரண்டு கட்டமும் பின்பு வலது அல்லது இடது பக்கத்தில் ஒரு கட்டமும் தாண்டக்கூடிய விதிகள் உள்ளது. அதுமட்டுமில்லாமல் இதற்கு முன் காய்கள் இருந்தால் அதையும் தாவித் தாண்டும்.

சதுரங்க ராணி:

இந்த ராணி காயானது எந்த இடத்திற்கும் செல்லக்கூடியது. இதற்கு முன் பார்த்தீர்கள் அல்லவா அந்த காய்களை போல் இந்த ராணி காயானது அனைத்து வழிகளிலும் செல்லும். ஆனால் குதிரை செல்வது போல் இந்த ராணி காய் செல்லாது.

சதுரங்கம் ராஜா:

இந்த ராஜாவும் ராணியை போல் செல்லக்கூடியவர். ஆனால் இவர் எங்கு சென்றாலும் ஒரு கட்டத்தை மட்டும் நகருவார். குதிரையை போல் இல்லாமல் மற்ற காய்களை போல் நகருவார்.

சதுரங்கம் சிப்பாய்:

இந்த காயானது நேராக மட்டுமே செல்லும் அதேபோல் ஒரு அடி மட்டுமே செல்லும் மற்றவர்களை வெட்ட வேண்டும் என்றால் தான் நிற்கும் இடத்திற்கு எதிரில் உள்ளவர்களை வெட்டும்.

இதையும் படியுங்கள்:
Way to Get a Toy by Yourself- Saving is key!
Chess game

சதுரங்கம் விளையாடுவதின் பயன்கள்:

* நினைவாற்றலை மேம்படுத்துகிறது.

முக்கியமாக நினைவில் கொள்ள வேண்டிய சிக்கலான விதிகள் மற்றும் முந்தைய தவறுகளைத் தவிர்க்க முயற்சிக்கும் போது அல்லது ஒரு குறிப்பிட்ட எதிராளியின் விளையாட்டு பாணியை நினைவில் வைத்திருக்கும் போது தேவைப்படுவதை நினைவுபடுத்துகிறது.

* மூளை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

நமது உடலில் உள்ள மிக முக்கியமான உறுப்பை உடற்பயிற்சி செய்வதற்கான சிறந்த விளையாட்டு ஆகும்: மூளைக்கு சவால் விடும் சதுரங்கம் விளையாட்டுகள் உண்மையில் மூளையின் நியூரான் செல்களில் இருந்து சிக்னல்களை அனுப்பும் உடல்களான டென்ட்ரைட்டுகளின் வளர்ச்சியைத் தூண்டுகின்றன.

* IQ ஐ உயர்த்துகிறது :

விளையாட்டை விளையாடுவது உண்மையில் ஒரு நபரின் IQ ஐ உயர்த்தும் என்று அறிவியல் ஆய்வு காட்டுகிறது.

* அல்சைமர் நோயைத் தடுக்க உதவுகிறது :

வயதாகும்போது, மூளையை ஆரோக்கியமாகவும், பொருத்தமாகவும் வைத்திருக்கிறது

* படைப்பாற்றலைத் தூண்டுகிறது :

சதுரங்கம் விளையாடுவது நம்முடைய அசல் தன்மையைக் கட்டவிழ்த்துவிட உதவுகிறது.

* சிக்கலைத் தீர்க்கும் திறன்களை அதிகரிக்கிறது:

ஒரு சதுரங்கப் போட்டிக்கு விரைவான சிந்தனை மற்றும் சிக்கலைத் தீர்க்கும் திறன் தேவை. ஏனெனில் உங்கள் எதிரி தொடர்ந்து அளவுருக்களை மாற்றுகிறார்.

* திட்டமிடல் மற்றும் தொலை நோக்கு பார்வை ஆகியவற்றைக் ஊக்குவிக்கிறது.

நல்ல செஸ் வீரர்கள் விதிவிலக்கான நினைவாற்றல் செயல்திறன் மற்றும் நினைவுபடுத்தும் திறன் கொண்டவர்களாக விளங்குகிறார்கள். மதியூகமும், தந்திரமும் இவ்விளையாட்டுக்கு முக்கியமானவையாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com