குழந்தைகள் விளையாடுவதினால் கிடைக்கும் 9 நன்மைகள்!


children playing!
children playing!
gokulam strip
gokulam strip

1.  ஆரோக்கியமான வளர்ச்சி

குழந்தைகள் மனரீதியாகவும், உடல் ரீதியாகவும், ஆரோக்கியமாக வளர உறுதுணையாக இருப்பது அவர்கள் விளையாட்டுகளில் ஈடுபடுவதாகும். எலும்புகள் மற்றும் தசைகளின் வளர்ச்சி அதிகரிக்கிறது. அதேவேளையில் சரியான வேலை நெறிமுறைகளை உருவாக்க உதவுகிறது.

நியூசிலாந்தில் நடத்தப்பட்ட ஆய்வில் பருவமடைவதற்கு முன்பே உடல் ரீதியாக மிகவும் சுறுசுறுப்பாக இருக்கும் குழந்தைகள் எதிர்கால வளர்ச்சிக்குத் தேவையான வலிமை பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் எனக் கண்டறியப்பட்டுள்ளது.

2. குழுப் பணியைக் கற்றுக்கொள்கிறது

ஒரு குழுவாக விளையாடும்போது அந்த அணியின் நன்மைக்காக எப்படி தியாகம் செய்வது என்பதை குழந்தைகள் கற்றுக்கொள்கிறார்கள். தோல்வியைத் தாங்கிக்கொள்ளவும் புரிந்துகொள்கிறார்கள். சேர்ந்து ஒரு அமைப்பில் வேலை செய்யும்போது தோழமையுடன் ஒரு பிரச்னையை எப்படி தீர்ப்பது என்று கற்றுக்கொடுக்கிறது.

3. தலைமைத் திறன்களை உருவாக்குகிறது

தலைமைத்துவத்தை கற்றுக்கொள்வதற்கு விளையாட்டு மிகவும் சிறந்தது. அணித் தலைவர்கள் மற்றும் மூத்த வீரர்கள் சிறப்புடன் செயல்பட்டு இளைய அல்லது அனுபவம் குறைந்த வீரர்களுக்கு வழிகாட்ட வேண்டும். தனி மனித நிலையைத் தாண்டி யோசித்து முடிவெடுப்பது என்பது விளையாட்டின் மூலம் மிக அழகாக கற்றுத் தரக்கூடிய ஒன்று. வெற்றியைத் தன்னலமின்றி ஒவ்வொரு வீரரிடமும் பகிர்ந்தளிப்பதும் எளிதாக கற்றுக்கொள்ள முடியும்.

4. சுயமரியாதை அதிகரிக்கும்

குழந்தைகளின் கடின உழைப்பையும், அதற்கான பலனையும், சாதனைகளையும், அனுபவிப்பது தனிமனிதர்களுக்குள் சுயமரியாதை உணர்வை ஏற்படுத்துகிறது. விளையாட்டில் சரியான நேரத்தில் இலக்குகளை நிர்ணயிப்பதும் அவற்றை அடைவதும் தன்னைதானே மேம்படுத்திக் கொள்ளும் இணையற்ற உணர்வைப் பெற உதவுகிறது.

5. உடல் எடையைச் சரியாக வைத்துக்கொள்வதற்கு

உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். விளையாடும் குழந்தைகள் சிறு வயதிலிருந்தே நல்ல நிலையில் இருப்பார்கள். அதே நேரத்தில் உடலுக்குத் தேவையான ஆரோக்கியமான உணவு மற்றும் போதுமான திரவங்களை அருந்துவது போன்ற சிறந்த நெறிமுறைகளை உருவாக்குகிறார்கள்.

6. நுரையீரலின் செயல்பாடு மேம்படுகிறது

விளையாட்டுகளில் ஈடுபடும்போது நுரையீரல்கள் ஆக்சிஜனை உறிஞ்சும் திறனுடன் செயல்படும். அதே வேளையில் உடலில் இருந்து தீங்கு விளைவிக்கும் வாயுக்களை திறம்பட வெளியேற்றுவதன் மூலமும் சிறந்த ஆரோக்கியத்தை அடைய உதவுகிறது.

7. தசை வலிமை மற்றும் சகிப்புத் தன்மையை மேம்படுத்துகிறது

சிறந்த நுரையீரல் திறனானது அதிகமான சகிப்புத்தன்மையைக் கொடுக்கிறது. மாரத்தான், சைக்கிள் ஓட்டுதல், போன்ற ஏரோபிக் சகிப்புத் தன்மையை உள்ளடக்கிய விளையாட்டுகள் இருதய செயல்பாட்டை அதிகரிக்க சிறந்தவை. நீச்சல் கால்பந்து போன்ற விளையாட்டுகள் கொழுப்பை எரிப்பதிலும், தசை வலிமையை வளர்ப்பதுலும் சிறந்தவை.

இதையும் படியுங்கள்:
குன்றில் கோயில் கொண்ட பிறைசூடி பெருமான்!

children playing!

8. மனஅழுத்தத்தை குறைக்கும்

வாழ்க்கையில் உள்ள அனைத்து பதட்டங்களையும் போக்க விளையாட்டு ஒரு சிறந்த வழியாகும். உடற்பயிற்சியானது ‘எண்டோர் பின்களை' வெளியிடுகிறது. இது நிதானமாக இருக்கவும், வரவிருக்கும் சவால்களை எதிர்த்துப் போராடுவதற்கு அதிக ஆற்றல் உணர்வையும் அளிக்கிறது.

9. தூக்கத்தை மேம்படுத்துகிறது

குழந்தைகள் மன அழுத்தம் இல்லாத வாழ்க்கை வாழும்போது ஒவ்வொரு இரவும் நல்ல தூக்கத்தை அனுபவிக்க மிகவும் உதவுகிறது.

குழந்தைகளே! மன அழுத்தத்தை உணரும்போது உங்கள் விளையாட்டு நண்பர்களில் ஒருவரை அழைத்து மைதானத்திலோ, அல்லது வீட்டிலோ சிறிது நேரம் விளையாடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com