
அன்புள்ள குழந்தைகளே!
உங்களுக்கு நான் இன்று ஒரு கதை சொல்ல போகிறேன். நமது முதுமலை காட்டில் சிங்கம் தவிர மற்ற எல்லா விலங்குகளும் உள்ளன. பெரிய காடு மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில். அதாவது கிழக்கு தொடர்ச்சியின் மலையும் சேர்ந்து உள்ளது.
காட்டில் யானை, புலி, சிறுத்தை, கரடி, நரி, ஓநாய், மான், முயல், குறும்பு செய்யும் குரங்குகளும் இருக்கின்றன. நான் ஒரு விஷயம் சொல்கிறேன். நீங்கள் கேளுங்கள். விலங்குகள் பிற விலங்குகளை தின்று விடும். யானை மட்டும் இதற்கு விதி விலக்கு. புலி மற்றும் சிறுத்தைக்கு பிடித்த உணவு மான் தான். ஒரு மானை பார்த்து விட்டால் சிறுத்தை விடவே விடாது.
தொடர்ந்து ஓட, பயங்கர வேகமாக துரத்தும். மானும் சிறுத்தையை பார்த்து விட்டால், வேகமாக ஓட ஆரம்பித்து விடும். கடைசியில் சிறுத்தை மானை கடித்து குதறி விடும்.