பளபளக்கும் புள்ளிகள் கொண்ட ராட்சதப் பல்லி!

ராட்சதப் பல்லி
ராட்சதப் பல்லி

லகிலேயே மிகப் பெரிய பல்லி, பல்லி இனத்திலே விஷத்தை உடைய ஒரே பல்லி இந்த ராட்சதப் பல்லி. அமெரிக்காவிலும், மெக்ஸிகோவிலும் மட்டுமே காணப்படுகிறது. வெப்பமான சூழ்நிலைகளில் பாறைகளுக்கு அடியிலும், பொந்துகளிலும் இந்தப் பல்லி வசிக்கிறது. இது இரவிலேதான் வெளியே வந்து இரை தேடும். முட்டைகள், எலிகள், சிறு பல்லிகள் ஆகியவை இதற்கு உணவாகும். இது சுமார் இரண்டு அடி நீளம் வளரும்.

இந்தப் பல்லி சில நாட்கள் பொந்தைவிட்டு வெளியே வராமல், இரை தேடாமல் செத்துவிட்டதோ என்று நாம் எண்ணும்படியாக மயக்கமானதொரு தூக்க நிலையில் ஆழ்ந்திருக்கும். அந்தச் சமயத்தில் இதன் வாலில் ஏற்கனவே சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் கொழுப்புப் பொருள் கரைந்து, இதன் உடலில் கலந்து,  இதற்குச் சக்தியைக் கொடுக்கும். ஆகவே, இதனுடைய வால் தூக்க நிலைக்கு உள்ளாவதற்கு முன்பு தடிப்பாகக் காணப்படும். இதன் செதில்களில் மஞ்சள் ஆரஞ்சு நிறப் புள்ளிகள் உண்டு. பளபளக்கும் இந்தப் புள்ளிகள் இதனை எளிதில் நமக்குக் காட்டிக் கொடுத்துவிடும்.

விஷத்தை உற்பத்தி பண்ணுகிற சுரப்பி உமிழ்நீரை உருவாக்கும் சுரப்பிக்கருகே அமைந்துள்ளது. ஆனால் இதன் உதடு, தாடை, பற்கள் முதலானவற்றின் விநோத அமைப்பு காரணமாக இந்தப் பல்லி கடித்தாலும், அதனால் ஏற்படும் காயத்தினுள், விஷம் எளிதில் இறங்கி விடாது. எனவே, பயப்படத் தேவையில்லை.

இதையும் படியுங்கள்:
குறட்டைக்கு டாட்டா சொல்ல சில எளிய வழிகள்!
ராட்சதப் பல்லி

இந்தப் பல்லி தன் பழக்கவழக்கங்களில் சோம்பேறித்தனமாயிருக்கும். தன் தலையை முறுக்கிக் கொள்ளும் இயல்பை உடையது. மின்னல் வேகத்தில் கடித்துவிடும். இராட்சதப் பல்லி, தகுந்த பிடிமானம் கிடைத்தால் உறுதியாய்ப் பற்றிக்கொண்டு, கீழே விழுந்து விடாதபடி தொங்கிக்கொண்டு இருக்கும். அதற்குத் தகுந்தவாறு இதன் கால்களில் உள்ள கூர்மையான நகங்கள் துணை புரிகின்றன.

- எஸ்.சாரதாம்பாள்

நன்றி:கல்கி

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com