குட்டிக் கதை - யானைக்குப் பானை!

story
storyImage credit - youtube.com
Published on

ரு ஊரில் இரண்டு நண்பர்கள் இருந்தனர். ஒருவர் சலவை தொழிலாளி. இன்னொருவர் மண் பானைகள் செய்யும் குயவர் இரண்டு பேருமே அரசரிடம் வேலை பார்த்து வந்தனர்.

ஒரு நாள் இரண்டு பேருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது. அவர்கள் தங்கள் குறைகளை தாங்களே தீர்த்துத் கொள்ளாமல் அரசரிடம் ஒருவரைப் பற்றி ஒருவர் குறை கூறிக் கொண்டே இருந்தனர்.

மண் பானை செய்யும் குயவர், சலவை தொழிலாளியை  அரசரிடம் வசமாக சிக்க வைக்க வேண்டும் என்று எண்ணி அரசரைப் பார்த்து, "அரசே, நமது பட்டத்து யானை  கருப்பாக இருக்கிறது, யானையை   சலவை தொழிலாளியிடம் கொடுத்து வெளுக்க செய்ய சொல்லுங்கள் என்றார்.

அரசர் மிகப் பெரிய முட்டாள் ஆவார். அவர் எதைப் பற்றியும் சிந்திக்காமல் சலவை தொழிலாளியை கூப்பிட்டு  யானையை வெளுத்து வரும்படி  கூறினார்.

உடனே, சலவை தொழிலாளி அரசரைப் பார்த்து," அரசே, யானையை வெளுத்து விடலாம்.  யானையை  வேக வைக்கும் அளவிற்கு  பெரிய மகரயாழ் பானை ஒன்றை குயவரை செய்து தரச் சொல்லுங்கள்" என்றார்.

அரசர், குயவரைக் கூப்பிட்டு "யானையை வேகவைக்க பெரிய  பானையை செய்து கொடு" என்று ஆணையிட்டார்.

குயவர்  திரு திருவன விழித்தார்.

இறுதியில் இருவரும் சந்தித்து உன் மேல் நானும், என் மேல் நீயும் குறை கூறி மாட்டிக் கொண்டோம். இதனால் நம் இருவருக்குமே வேலை பார்ப்பதில் துன்பம். இனிமேல் இது போல நடக்கக் கூடாது. நம் தவறுகளை நாம் திருத்திக் கொள்வோம். எப்போதும் நல்ல நண்பர்களாய் இருப்போம் என்று இருவரும் கூட்டாக அரசரிடம் சென்று மன்னிப்பு கேட்டனர்.

இதையும் படியுங்கள்:
Interview - Mehaa - The Skater Girl... Doing India Proud!
story

மறுபடியும் இருவரும் ஒருவருக்கொருவர் குறை சொல்லாமல் முன்பு போலவே நண்பர்கள் ஆனார்கள்.

குழந்தைகளே… ஒருவர் மீது ஒருவர் குறை சொல்லிக் கொண்டே இருந்தால் வாழ்க்கையில் மனக்கசப்புடன், விரோதம் அதிகம் ஆகும்.

நண்பர்களாக நட்புடன் பழகி வந்தால் வாழ்க்கை இனிக்கும்.

செய்வீர்களா? நட்புடன் பழகுங்கள். மகிழ்வாய் இருங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com