1. தொப்பி போட்ட காவல்காரன் உரசி விட்டால் சாம்பல் ஆவான் அவன் யார்?
2. கீழே ஊற்றிய தண்ணீர் மேலே தொங்கி இனிக்குது அது என்ன?
3. ஊர் சுற்ற கூப்பிட்டால் கூட வருவான் ஆனால் வீட்டுக்குள்ளே வரமாட்டான் அவன் யார்?
4. அடித்தாலும் உதைத்தாலும் அழ மாட்டான் அவன் யார்?
5. இடி இடிக்கும், மின்னல் மின்னும் ஆனால் மழை பெய்யாது அது என்ன?
6. வாள் இல்லாமல் கேடயம் மட்டும் வைத்திருக்கும் போருக்கு போகாத வீரன். அவன் யார்?
7. வெள்ளை ஆடை உடுத்திய மஞ்சள் மகாராணி அவள் யார்?
8. யாரும் செய்யாத கதவு தானே திறக்கும் தானே மூடும். அது என்ன?
9. சொன்ன நேரத்துக்கு தொண்டை கிழிய கத்துவான் அவன் யார்?
10. வெட்டிக் கொள்வான் ஆனாலும் ஒட்டிக் கொள்வான் அவன் யார்?
11. மரத்துக்கு மரம் தாவும் குரங்கல்ல பட்டை போட்டிருப்பான் சாமி அல்ல அவன் யார்?
12. தொட்டுப் பார்க்கலாம் ஆனால் எட்டிப் பார்க்க முடியாது. அது என்ன?
13. பற்கள் உண்டு ஆனால் கடிக்க மாட்டான் அவன் யார்?
14. ஆயிரம் தச்சர் கூடி அழகான மண்டபம் கட்டி ஒருவன் கண் பட்டு உடைந்ததாம் மண்டபம். அது என்ன?
15. கண்ணில் தென்படுவான் கையில் பிடிபட மாட்டான் அவன் யார்?