அக்பர் ஒரு நாள் பீர்பாலிடம் பேசிக்கொண்டு இருக்கும்போது, இப்படி ஒரு புதுமையான கேள்வி ஒன்றை பீர்பாலிடம் கேட்டார்.
திடீரென அக்பர், இப்படி ஒரு கேள்வி கேட்டதும், இதனை எதிர்பார்க்காத பீர்பால், அரசே! இதற்கான பதிலை நாளை கூறுகிறேன் என்றார்.
மறுநாள் காலை, பிர்பால் டில்லிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்திற்கு சென்று அங்கு ஒருவரிடம் நான் சொல்வது போல் செய்தால் நூறு வெள்ளிக்காசுகள் தருகிறேன் என்றார்.
உன்னை நான் இப்போது அக்பரின் அரண்மனைக்கு அழைத்து சென்று மன்னரிடம் அறிமுகம் செய்து வைப்பேன்.
அச்சமயம் மன்னர் உள்ளிடம் சில கேள்விகளைக் கேட்பார்.
அவர் என்ன கேள்விகள் கேட்டாலும் வாய் திறந்து பதில் பேசாது மவுனமாக நின்று கொண்டு இருக்கவேண்டும் என்று கூறினார். அவனும் சரி என்றான்.
அடுத்தநாள் கிராமத்தானை அரசவைக்கு அழைத்து சென்று, மன்னரிடம் இவன் எனது உறவினன் படித்தவன், உலக அறிவு தெரிந்தவன். தாங்கள் என்ன கேள்விகள் கேட்டாலும்
உடனே பதில் கூறுவார் என்றார் பீர்பால்.
மன்னர், பீர்பாலிடம் கேட்ட அதே கேள்வியை முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கேட்டார்.
அதற்கு, கிராமத்தான் பீர்பால் சொல்லியபடி பதில் ஒன்றும் பேசாது மவுனமாக நின்றான். மன்னர் பலமுறை கேட்டும் பதில் கூறாது வாய் மூடி மவுனம் சாதித்தான்.
இதனால் அக்பர் கோபமடைந்து, பீர்பாலிடம் உங்கள் உறவினரிடம் பலமுறை கேட்டும் இதற்கு பதில் கூறாது மவுனமாக வாய் மூடி சாதிக்கிறானே என்று கேட்டார்.
மன்னா, நீங்கள் கேட்ட கேள்விக்குத்தான் பதில் கூறி விட்டானே என்றார்.
மன்னர் உடனே, நான் கேட்ட கேள்விக்கு உரிய பதில் சொல்லவில்லையே?
உடனே பீர்பால், மன்னரிடம் முட்டாள்களிடம் சில சமயம் பேச நேரிட்டால் என்ன செய்ய வேண்டும் என்றுதானே கேட்டீர்கள்?
அதற்கான விடையைத்தான் தன்னுடைய மவுனத்தின் மூலம் விடை கூறியுள்ளார். முட்டாள்களிடம் பேசும்போது மவுனமாக இருக்க வேண்டும் என்பதைதான் வாய் மூடி மவுனமாக இருந்தான் என்றார் பீர்பால்.
முட்டாள்களுக்கு உதாரணமாக தன்னைக் குறிப்பிட்டு பேசினாலும், முட்டாள்களிடம் எதனைப் பற்றி பேசினாலும் அவர்களிடம் பேசாமல் இருப்பதே சிறந்ததாகும் என்பதை உணர்த்திய பீர்பாலின் நுண் அறிவை பாராட்டினார்.