வியப்பூட்டும் ஹம்மிங் பறவைகள்!

ஹம்மிங் பறவைகள்
ஹம்மிங் பறவைகள்
gokulam strip
gokulam strip

றவை இனத்தில் மிகச்சிறிய பறவை அமெரிக்காவில் காணப்படும் ஹம்மிங் பறவைகளே. இந்த இனத்தில் பீ ஹம்மிங் பறவை என்ற ஹம்மிங் பறவைகள் அதிகபட்சமாக இரண்டு அங்குலம் அளவே வளர்கின்றன. ஹம்மிங் பறவை இனத்தில் 341 வகைகள் காணப் படுகின்றன. ஹம்மிங் பறவைகள் இறக்கைகளை அசைக்கும் போது ஒருவித ஹம்மிங் போன்ற இசை ஒலி உண்டாகும். இதன் காரணமாகவே இவை ஹம்மிங் பறவைகள் என அழைக்கப்படுகின்றன.

உலகில் உள்ள பறவை இனத்தில் எந்த பறவைக்குமே இல்லாத வியப்பூட்டும் ஆற்றல் ஹம்மிங் பறவைகளுக்கு மட்டுமே உள்ளது. ஹம்மிங் பறவைகளால் முன்புறமாக மட்டுமில்லாமல் பின்புறமாகவும் பறக்க முடியும். இதுமட்டுமின்றி இப்பறவைகளால் இடமிருந்து வலமாகவும் வலமிருந்து இடமாகவும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் பறக்க முடியும்.

ஹம்மிங் பறவைகளின் கால்கள் மிகமிகச் சிறியவை. அதனால் மற்ற பறவைகளைப் போல இவை நடப்பதில்லை. இப்பறவைகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயர வேண்டுமென்றால் பறந்தே செல்லுகின்றன.

ஹம்மிங் பறவைகள் தங்கள் இறக்கைகளை மிக மிக வேகமாக அசைக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை ஒரு வினாடிக்கு சுமார் 150 முதல் 200 தடவைகள் வரை தங்கள் இறக்கைகளை அசைக்கின்றன என்றால் அவற்றின் வேகம் எவ்வளவு இருக்கும் என்பதை கணக்கிட்டுப் பாருங்கள். இவற்றின் இதயமானது ஓய்வாக அமர்ந்திருக்கும்போது நிமிடத்திற்கு 250 தடவைகளும் பறக்கும் சமயங்களில் மணிக்கு 1220 தடவைகளும் துடிக்கும்.

ஹம்மிங் பறவைகளுக்கு மிகவும் பிடித்த உணவு தேன். இவற்றின் நாக்கானது மூக்கை விட இரண்டு மடங்கு நீளமாக இருக்கும். இவை தினந்தோறும் சுமார் 2000 முதல் 5000 மலர்களை நாடிச் சென்று தேனை உறிஞ்சிக் குடிக்கின்றன. இப்பறவைகள் மிக வேகமாக இயங்குவதால் நாள் முழுக்க பத்து நிமிடங்களுக்கு ஒரு முறை சாப்பிட்டுக் கொண்டே இருக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. தொடர்ந்து ஒரு மணி நேரத்திற்கு இவை சாப்பிடவில்லை என்றால் இறந்து போகக் கூடும். இவை அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும் ஒரு நாளைக்கு தங்களோட உடல் எடையில் பாதி எடையளவு உணவையாவது சாப்பிட்டாக வேண்டிய கட்டாய சூழ்நிலையில் உள்ளன. ஹம்மிங் பறவைகள் தொடர்ந்து ஓய்வெடுக்காமல் சுமார் 1000 பூக்கள் மீது உட்கார்ந்து உட்கார்ந்து தேனை எடுக்கும் ஆற்றலைப் பெற்றுள்ளன. இவை சிறிய சிலந்திகளையும் சிறு பூச்சிகளையும் சாப்பிடுகின்றன.

ஹம்மிங் பறவைகள்
ஹம்மிங் பறவைகள்

ஹம்மிங் பறவைகள் ஒரு சமயத்தில் இரண்டு முட்டைகள் மட்டுமே இடுகின்றன. ஒவ்வொரு முட்டையும் சுமார் அரை அங்குலம் அளவே இருக்கும். முட்டையானது தாய்ப் பறவையால் 13 முதல் 22 நாட்கள் வரை அடைகாக்கப்பட்டு குஞ்சு பொரிக்கப்படுகின்றன. இவை சிறிய அளவில் தங்களுக்கென்று கூடுகளை அமைத்துக் கொள்ளுகின்றன. ஆண் பறவைகள் உணவைத் தேடி பெண் பறவைக்கும் குஞ்சுகளுக்கும் கொண்டு வரும் பணியைச் செய்கின்றன. பெண் பறவைகள் கூட்டைக் கட்டுவதும் குஞ்சுகளை பார்த்துக் கொள்ளும் பணியையும் செய்கின்றன. ஹம்மிங் பறவைகள் சில வேளைகளில் கூட்டமாகச் சேர்ந்து கழுகுகளையும் எதிரிகளாக நினைக்கும் பறவைகளையும் தாக்கவும் செய்கின்றன. ஹம்மிங் பறவைகள் மூன்று ஆண்டுகள் முதல் ஆறு ஆண்டுகள் வரை வாழ்கின்றன.

இதையும் படியுங்கள்:
'ஜூஸ் கிளீன்ஸ்' என்றால் என்ன தெரியுமா?
ஹம்மிங் பறவைகள்

ஹம்மிங் பறவைகள் சூரியக்குளியலை மிகவும் விரும்புகின்றன என்பது ஆச்சரியமான ஒரு செய்தி. இவை தங்களுடைய இறக்கைகளை அடித்தபடி சூரிய ஒளி தங்களின் உடலில் படும்படியாக பறக்கின்றன. இவை மணிக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கும் ஆற்றலையும் பெற்றுள்ளன. ஹம்மிங் பறவைகள் இடம் விட்டு இடம் பெயரவும் செய்கின்றன. இந்த பறவைகள் சுமார் 850 கிலோமீட்டர் தொலைவிற்கு தொடர்ந்து பறந்து சென்று ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு இடம் பெயரும் ஆற்றலைப் பெற்றுள்ளன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com