வானத்தில் தோன்றும் அரோரா – அழகா? ஆபத்தா?

Auroras
Auroras

வடக்கு விளக்குகள் (அரோரா பொரியாலிஸ்) அல்லது தெற்கு விளக்குகள் (அரோரா ஆஸ்ட்ராலிஸ்) என்றும் அழைக்கப்படும் ‘அரோராக்கள்’ ‘Auroras’, நம் கிரகத்தின் வானத்தை அலங்கரிக்கும் இயற்கை ஒளி காட்சிகளாகும். ‘ஆர்க்டிக் மற்றும் அண்டார்டிக்’ போன்ற உயர்-அட்சரேகை பகுதிகளில் (High Latitude regions), இந்த வர்ணஜாலத்தை நாம் காணலாம். இது பிரகாசமான ஒளியில் திரைச்சீலைகள்(curtains) போன்ற வடிவத்தில் சில நேரங்களில் பச்சை, சில நேரங்களில் சிவப்பு என வானம் முழுவதும் நடனமாடுவதை நம்மால் பார்க்கமுடியும்.

‘சூரியக் புயல் காற்றினால்’ பூமியின் காந்த மண்டலத்தில்(Magnetic Field) ஏற்படும் இடையூறுகள் காரணமாக இந்த நிறங்கள் வெளிப்படுகின்றன. சூரியனில் இருந்து வரும் சார்ஜ் செய்யப்பட்ட துகள்கள் (முக்கியமாக எலக்ட்ரான்கள் மற்றும் புரோட்டான்கள்) நமது கிரகத்தின் மேல் வளிமண்டலத்துடன் தொடர்பு கொள்ளும்போது, இந்த வர்ணஜாலம் நிகழ்கிறது.

நமது சூரியனில் அடிக்கடி உருவாகும் புயல்கள் எதனால் ஏற்படுகிறது என்பதை அறிய பல்வேறு ஆராய்ச்சிகள் உலகெங்கும் நடந்து கொண்டிருக்கின்றன. இதற்கெல்லாம் ஒரு படி மேல் நாசா ‘Parker Solar Probe’ என்ற விண்கலனை சூரியனுக்கு அருகிலே வட்ட பாதையில் சுற்றவிட்டு இந்த புயல் வருவதற்கான காரணங்களை சேகரித்துக்கொண்டிருக்கிறது.

விஞ்ஞானிகள் கூறுவது என்ன?

இப்போதைக்கு பூமிக்கு இயற்கையாகவே அதைச் சுற்றி காந்த மண்டலம் (Magnetic Field ) இருப்பதால். சூரிய புயலால் நமக்கு வரும் பாதிப்பு தடுக்கப்பட்டு கொண்டிருக்கிறது. அதாவது, சூரிய புயல்கள் நம் காந்த மண்டலத்தில்பட்டு திசை திருப்பப்படுகின்றன. இதனால் இப்போதைக்கு நம் பூமியில் வாழும் உயிரினங்களுக்குப் பெரிதாக எந்தப் பாதிப்பும் இல்லை. ஆனால், நம் பூமியின் வளிமண்டலத்திற்கு( Atmosphere) வெளியே சுற்றிக்கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள் மற்றும் பிற விண்வெளி ஆய்வுக் கருவிகள் இதனால் பாதிக்கப்படுகின்றன.

இதையும் படியுங்கள்:
Endangered Animals – How can we help?
Auroras

அப்படி செயற்கைக் கோள்கள் பாதிக்கப்பட்டால், நம் தொலைத்தொடர்புகள் முற்றிலுமாக துண்டிக்கப்படும். இதனால் மிகப்பெரிய பொருளாதார இழப்பை நாம் சந்திக்க நேரிடும். காரணம் இன்றைய காலக்கட்டத்தில் பல்வேறு தொழில்கள், அதில் மூலம் நடக்கும் வணிகங்கள் அனைத்தும் இணைய சேவையை நம்பித்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இது தடைப்படும் மூலம் பல கோடிபேர் வேலை இழப்பார்கள். மற்றும் அதனால் மனிதகுலமே பண்டைய காலத்திற்கு பின் தங்க வேண்டிய சூழ்நிலைகூட ஏற்படலாம். இதைத் தடுக்க வேண்டும் என்றால் வரும் காலங்களில் ஏதோ ஒரு பெரிய சூரிய புயல் வருவதற்கு முன், நம் பூமியைச் சுற்றி வரும் செயற்கைகோள்களில் சூரிய புயல்களால் வரும் பாதிப்புகளைத் தாங்கும் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்த வேண்டும்.

இப்படி பல பிரச்னைகளை விளைவிக்கக் கூடிய இந்தச் சூரிய புயல்கள், நம் மனித கண்களுக்கு ‘கண்கொள்ளா வண்ணங்கள் நிறைந்த காட்சியாக நாம் ரசித்துக்கொண்டிருக்கிறோம்’.

சூரிய கதிர்கள் (UV rays) சாதாரணமாகவோ நம் சருமத்துக்கும், அவற்றை நேரடியாகப் பார்க்கும்போது நம் கண்களுக்கும் பெறும் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இதில் சூரிய புயல்கள் நேரடியாக தாக்கினால் என்ன ஆகும். அது நம் விஞ்ஞானிகள் கைகளில்தான் உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com