விழிப்புணர்வு: நீர் அருந்துதல்!

Drinking water
Drinking waterImage credit - pixabay.com

கோடைக்காலம் வந்துவிட்டது. வெயில் கூடும்போது தாகமும் அதிகமாகும். அடிக்கடி தண்ணீரோ இதர பானங்களையோ குடித்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்படும். குடிப்பதற்கு முன்னர் சரியான நிலையில் அருந்துவது எப்படி எனபதைத் தெரிந்து கொள்வது நல்லது.

தண்ணீராக இருந்தாலும் சரி... வேறு எந்த பானங்களாக இருந்தாலும் சரி... நின்றுகொண்டு அருந்துவதைத் தவிர்த்தே ஆகவேண்டும். அமர்ந்துகொண்டு எதையும் குடிப்பதுதான் சிறந்தது. நின்றுகொண்டு தண்ணீரைக் குடிக்கும்போது அதிக அலவிலான தண்ணீர் வயிற்றின் கீழ்ப்பகுதியில் வேகமாக மோதும். இது அந்தப் பகுதியில் இருக்கும் திசுக்களை சேதப்படுத்த வாய்ப்புண்டு. தொடர்ந்து இவ்விதம் நிகழும்போது அது இதயம் மற்றும் சிறுநீரகங்களையும் பாதிக்க வாய்ப்பிருக்கிறது.

நின்றுகொண்டு அருந்தும்போது, அது வடிகட்டப்படாமல் சிறுநீரகத்துக்குள் வேகமாகப் புக நேரிடும். அசுத்தங்கள் சிறுநீர்ப்பையிலும் ரத்தத்திலும் கலக்க இது வழிவகுக்கும்.

நின்றுகொண்டே தண்ணீரைக் குடிக்கும்போது உடலில் இருக்கும் ஏனைய திரவங்களின் சமநிலையை அது பாதிக்கும். உதாரணமாக மூட்டுகளில் இருக்கும் திரவங் கள் குறையும்போது மூட்டு வலியும் வாதமும் ஏற்படலாம்.

நின்றுகொண்டே அருந்தும் நீர் வேகமாக தொண்டைப் பகுதியில் மோதும் அல்லவா? அப்போது ஜீரண நீர்கள் மேலெழும்பி தொண்டைக் கமறலையும் எரிச்சலையும் ஏற்படுத்தக்க்கூடும். செரிமானக் கோளாறுகள்கூட ஏற்படலாம்.

நிதானமாக அமர்ந்துதான் குடிக்கவேண்டும். தண்ணீர் குடிக்கும்போது அதிக அளவு தண்ணீரை ‘மடக்’கென்று விழுங்காமல் கொஞ்சம் கொஞ்சமாகதான் குடிக்கவேண்டும்.

தண்ணீர் குடித்தவுடனேயே சாப்பிடுவதோ, அல்லது சாப்பிட்டு முடித்தவுடனேயே தண்ணீர் குடிப்பதோ நல்லதல்ல. ஏனெனில் செரிமானத்துக்கு உதவும் என்ஸைம்களை அது நீர்த்துப்போகச் செய்துவிடும்.

குளிர்ந்த மோர், நீரகாரம்,  பழரசம், நறுமணப் பால், சர்பத், பானகம் போன்றவற்றையும் அருந்தலாம். பாட்டில்களில் இருக்கும் குளிர் பானங்கள், காற்றடைத்த பானங்கள் அறவே தவிர்க்கப்படவேண்டியன ஆகும்.

இதையும் படியுங்கள்:
கோடை வெப்பத்தைத் தணிக்கும் அருமருந்து வெள்ளரிக்காய்!
Drinking water

படுத்துக்கொண்டு குடிப்பது மிகவும் தப்பு. ஒடிக் கொண்டிருக்கும் வண்டியில் எதையும் அருந்தாதீர்கள். ஓடிக் கொண்டோ, நடந்துகொண்டோ அருந்தினால், மூச்சுக் குழலுக்குள் நீர் சென்று, மூச்சுத்திணறல் ஏற்படலாம். அருந்தும்போது பேசுவதும் தவறுதான்.

நீர் அருந்துவதை ஒரு தியானம் போல ஒவ்வொரு துளியையும் ரசித்து, ருசித்து, அனுபவித்து நன்றி தெரிவித்துக் குடிக்கப் பழகிக் கொள்ளுங்கள். தண்ணீரைச்சிக்கனமாக உபயோகிக்கவேண்டும். குறிப்பாகக் குடிநீரை எந்தக் காரணம் கொண்டும் வீணாக்கக்கூடாது. நீர் இறைவன் நமக்களித்திருக்கும் கொடை என்பதை மறந்து விடாதீர்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com