ஸ்போர்ட்ஸில் ஈடுபாடுள்ள குழந்தைகளுக்கு...

ஸ்போர்ட்ஸில் ஈடுபாடுள்ள குழந்தைகளுக்கு...
gokulam strip
gokulam strip

விளையாட்டுப் பயிற்சியில் ஈடுபட்டு வரும் குழந்தைகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் அறிந்து, கடைப்பிடிக்க வேண்டிய சில நல்ல பழக்க வழக்கங்கள் –

*எந்த விளையாட்டிற்காக பயிற்சி எடுக்கின்றோமோ, அதற்கு உண்டான உடைகளை மட்டும் அணிந்து செல்ல வேண்டும். தங்கள் இஷ்டம் போல கையில் கிடைத்த உடையை அணிந்து செல்வது தவறு.

*பயிற்சி முடிந்தவுடன், தினமும் உடனே குளித்து, உலர்ந்த சுத்தமான உடை அணிவது அவசியம்.

*பயிற்சியி்ன் முடிவில், அன்று அணிந்திருந்த உள்ளாடைகளையும், பயிற்சி உடைகளையும் அன்றே துவைக்க வேண்டும்.

*கைகளிலும், கால்களிலும் நகங்களை வெட்டி சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

*அழுக்கான சாக்ஸ் போட்டுக் கொள்வதாலும், கால்களை அடிக்கடி கழுவாமல் இருப்பதாலும் படை போன்ற சரும வியாதி வர வாய்ப்பு உள்ளது. அத்தோடு குளியலறையில் சென்று வரும்போது குடும்பத்தில் உள்ள மற்றவர் களுக்கும் பரவ வாய்ப்புள்ளது. இது பரவும்போது கால் மற்றும் கால் விரல்களின் இடையே அரிப்பும், தோல் வெள்ளை நிறமாகி உரியவும் ஆரம்பிக்கும். உடனே டாக்டரைக் கண்டு அதற்காக மருந்தை தடவ வேண்டும். இதைச் சுலபமாக தவிரக்க சாக்ஸை அடிக்கடி மாற்றியும், அதிக இறுக்கம் இல்லாத ‘ஷு’வை அணிவதும் நலம்.

*பயிற்சியின்போது ஸ்போர்ட்ஸ் பானங்கள் மற்றும் தண்ணீர் அருந்தும்போது மடமடவென அதிகமாகக் குடிக்காமல், சரியான இடைவெளியில் சிறிது, சிறிதாகப் பருக வேண்டும்.

*கையில், உள்ளங்கையில் மற்றும் கால்களின் விரல்கள் மற்றும் கால் பாதங்களில் உண்டாகும் சிறிய தோல் உரிவுகளை ‘பேண்ட்-எய்ட்’ போன்ற பிளாஸ்டர்களை உபயோகித்துத் தவிர்க்கலாம்.

*மறுநாள் பயிற்சிக்குத் தேவையான உடைகளை முதல் நாள் இரவே எடுத்து வைப்பது நல்லது.

*தொண்டை வலி, காய்ச்சல் என உடல்நிலை சரியாக இல்லாத சமயங்களில் விளையாட்டுப் பயிற்சியை தவிர்ப்பது நல்லது.

*பயிற்சியின்போது உண்டாகும் பலத்த மற்றும் சிறிய காயங்கள் பூரண குணமானவுடனேதான் அடுத்த பயிற்சி செல்ல வேண்டும். குணமடைந்து நீண்ட ஓய்வுக்குப் பின் வரும் நேரத்தில், மெதுவாக படிப்படியாக பயிற்சியின் அளவைக் கூட்டுவது மிக அவசியம்.

*ஒவ்வொரு நாளும் பயிற்சிக்குப் பிறகு நல்ல ஓய்வு மற்றும் நல்ல தூக்கம். மிகவும் அத்தியாவசியமானது. இதுவும் பயிற்சியின் ஒரு அங்கமேயாகும்.

- உமா நாகராஜன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com