ஒருவருக்கு பிடித்த பொருள் அடுத்தவருக்கு பிடிப்பதில்லை ஏன்?

Children Story in tamil!
Tamil short Story
Published on

கிருஷ்ண தேவராயரின் அரண்மனையில் மதியூக மந்திரி அப்பாஜி இருந்தார். எதைக் கேட்டாலும் அதற்குரிய பதிலை கூறிவிடுவார்.

ஒருநாள் கிருஷ்ண தேவராயரின் அரண்மனை அன்று கூடியிருந்தது.

அறிஞர்கள், பெருமக்கள், மந்திரி பிரதானிகள் கூடியிருந்தனர்.

மனிதனின் மனஇயல்பு பற்றி பேச்சு வந்தபோது, பலரும்

பலவிதமாக கூறினார்கள்.

அப்பாஜி எழுந்து, "ஒரு மனிதனின் மனம் எப்படியோ, அப்படித்தான் உலகமும் என்று மக்கள் நினைப்பார்கள்" என்று கூறினார்.

"உலகில் ஒரு பிடித்த பொருள் மற்றொரு மனிதனுக்கு பிடிப்பதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் ஒவ்வொரு விதமாக தோன்றும்" என அப்பாஜி ஆணித்தரமாக கூறினார்.

அப்பாஜியின் வாதத்தை அரசர் ஒப்புக்கொள்ளவில்லை. மற்றவர்களும், அரசர் சொன்னதை ஆதரித்தனர்.

உடனே அப்பாஜி தான் கூறிய கருத்தை சில நாட்களில் நிரூபிக்கிறேன் என்று கூறினார்.

நாட்கள் உருண்டோடின. ஒருநாள் அரசரும், அப்பாஜியும் மாறுவேடத்தில்  வயல்வெளிக்கு உலாவச் சென்றனர்.

அங்கு மூன்று பெண்கள் நின்று பேசிக்கொண்டு இருந்தனர்.

முதல் அந்த வயலைப் பார்த்து

"இது முகத்துக்குத்தான் உதவும்" என்றாள்.

உடனே மற்ற பெண் அதை மறுத்து "வாய்க்குத்தான் உதவும் " என்றாள்.

மூன்றாவது பெண் "நீங்கள் சொல்வதெல்லாம்   தவறு, இது பிள்ளைக்குத்தான் உதவும்" என்று உறுதியாகக் கூறினாள்.

இதையும் படியுங்கள்:
Leafy Sea Dragon: The Ocean’s Underwater Dragon!
Children Story in tamil!

பின்பு மூன்று பெண்களும் சென்ற பின், கிருஷ்ண தேவராயர் அவர்கள் பேசியது புரியவில்லையே? அதற்குரிய விளக்கத்தை அப்பாஜியிடம்  கேட்டார்.

உடனே அப்பாஜி "முகத்துக்கு உதவும் என்றால் மஞ்சள் பயிரிடலாம் என்று பொருள்.

"வாய்க்கு உதவும் என்றால். நெல் பயிரிடலாம் என்று பொருள்.

"பிள்ளைக்கு உதவும் என்றால் தென்னம் பிள்ளை பயிரிடலாம் என்று பொருள்" என்றார் அப்பாஜி.

அரசர் ஆச்சர்யத்துடன் கேட்டார், அப்பாஜி தொடர்ந்து "அரசே உள்ளம் எப்படியோ அது போலவே உலகம் என்று நினைப்பது மனித மனம் என்று நான் அன்றே சொன்னேனே" என்றார்.

மன்னரும் மகிழ்ச்சியுடன் இதை ஆமோதித்தார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com