விழிப்புணர்வு கதை: 'புஸ்வானமாய்' ஒரு புன்சிரிப்பு!

childrens deepavali awarness story!
children awarness story...
Published on

ங்க வீட்டு வாசலில்தான் அந்த பட்டாசு விபத்து நடந்தது. என்னோட கடைசி பையன் பட்டாபிக்கு பத்து வயசுதான் ஆகுது. ஆனா, சுருசுரு கம்பி மத்தாப்பு போல சுறுசுறுப்பா இருப்பான். வீட்டுக்கு ஒரே பையன். அதனாலே  எங்களுக்கு அவன் மேல உசுறு. அவன் பண்ற அடாவடித்தனத்தெல்லாம் கேட்டுக்கவே மாட்டோம். அதன் விளைவுதான் இப்போது தெருவே அல்லோலகல்லோலப்படுது.

பாட்டிலில் வைத்து ஒரு ராக்கெட்டை விட்டுக்கொண்டிருந்தான். வெடியை வைத்திருந்த பாட்டில் எதிர்பாராமல் டைரக்‌ஷன்  மாறிடுத்து. நேரா மூணாவது தெருவில இருந்த அருணா டவர்ஸ் மூனாவது மாடி ஜன்னல்ல பட்டு பக்கத்துல இருந்த ஒரே ஒரு தென்னை மரத்துல போய் உட்கார்ந்து விட்டது. சிறிது நேரம் வீரமா எரிஞ்சு அணைஞ்சுட்டுது. அந்த  மரம் இனிமே வளருமா? வளராதான்னு போகப் போகத்தான் தெரியும். எனக்குத் தெரிஞ்ச வரைக்கும் அது அவ்வளவுதான். அந்த ஏரியா கவுன்சிலர் அங்குதான் வசிக்கிறார். கவுன்சிலர் வீடானதால ஃபயர் எஞ்சின் உடனே வந்து தன் வேலைய ஆரம்பிச்சது. தீயையும் அனைச்சுது. மீடியாகாரங்க எல்லோரும் புறப்பட்டுட்டாங்க.

அந்த தெரு வெல்பேர் அசோசியேஷன் தலைவர் முத்துசாமி கூட்டத்தை உடனே கூட்டினார். பக்கத்துல இருந்த பார்க்கலதான் மீட்டிங். இது எப்படி நடந்தது என்று தெரியவில்லை, எப்படி நடந்திருந்தாலும் இது நமக்குள்ள தான் ஒருத்தர் சேர்ந்து இருக்கிறோம். அவர் தன்னை திருத்திக் கொண்டு இதை பட்டாசு வெடிக்கும் பொழுது அரசின் ஆணைக்கு உட்பட்டு பட்டாசுகளை வெடிக்க வேண்டும். குழந்தைகள் வெடிக்கும் போது பெரியவர்களுடைய பாதுகாப்போடு வெடிக்க வேண்டும். இப்படி எல்லாம் அரசு சொல்லி இருக்கும் கட்டுப்பாட்டுகளை ஒரு பேப்பரில் எழுதி வைத்து படித்தார்.

அந்தப் பகுதியில் இருந்த எல்லா சங்க உறுப்பினர்களும் ’சரி’ என்று சொல்லும் விதமாக கைத்தட்டினார்கள். வீட்டுக்கு வந்து பாமாவும் நானும் பட்டாபியை தேடினோம். அவன் தன்னுடைய பெட்ரூம்ல ரொம்ப சமத்தா ஹோம் ஒர்க் எழுதிட்டு இருந்தான்.

'ஏண்டா, பட்டாசு வெடிக்க வரலையா?’ ன்னு கேட்டோம். ‘வேண்டாம் பா.  இப்பல்லாம் எனக்கு பட்டாசு வெடிக்க பிடிக்கறதே இல்லப்பா” என்று சொல்லி தான் படிப்பதை  விரைவுப்படுத்தினான். ’எனக்கு இனிமே பட்டாசு செலவு மிச்சம் . ரொம்ப தேங்க்ஸ்’ என்றேன் பட்டாபியிடம். பாமா ஏனோ என்னை ஒரு மாதிரி பார்த்து புஸ்வானமாய் புன்னகைத்தாள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com